விலகிய தோனி... கலங்கிய வீரர்கள்... அறையில் நடந்தது என்ன?
ஜடேஜா கேப்டனாக செயற்பட்ட போதும் அந்த முயற்சி தோல்வியை தழுவியதுடன், அணியைக் காப்பாற்ற தோனி மீண்டும் கேப்டனாக செயற்பட்டார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகியுள்ள நிலையில், அவர் தனது முடிவினை அறிவித்த போது அந்த அறையில் என்ன நடந்தது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் என்றால் தோனி என்ற பெயரே நினைவுக்கு வரும் நிலையில், 2008 முதல் 2023 வரை ஐந்து முறை அந்த அணிக்கு கேப்டனாக தோனி கோப்பை வென்று கொடுத்து உள்ளார்.
இடையே, ஜடேஜா கேப்டனாக செயற்பட்ட போதும் அந்த முயற்சி தோல்வியை தழுவியதுடன், அணியைக் காப்பாற்ற தோனி மீண்டும் கேப்டனாக செயற்பட்டார்.
இந்த நிலையில்தான் 2024 ஐபிஎல் தொடர் தோனியின் கடைசி கிரிக்கெட் தொடராக இருக்கும் என்று கூறப்படுவதுடன், சிஎஸ்கே அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட்டை நியமித்துவிட்டு, கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகி உள்ளார்.
கேப்டன் அவருதான்.... ஆனா முடிவு எடுக்கிறது யாரு... குழப்பத்தில் ரசிகர்கள்!
அவர் தனது தீர்மானத்தை முதலில் சக வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் குழுவிடம் அறிவித்த போது என்ன நடந்தது என்பதை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங் கூறி இருக்கிறார்.
தோனி தான் கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த போது, அப்போது அனைவரும் கனத்த இதயத்துடன் கலங்கியதாக பிளெம்மிங் தெரிவித்து உள்ளார்.
பின்னர் அனைவரும் புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு வாழ்த்துக்களை கூறியதாகவும், மூத்த வீரர் ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு உதவியாக இருப்பார் என, பிளெம்மிங் குறிப்பிட்டு உள்ளார்.