180 கூட சேசிங் பண்ண முடியாம திணறிய சிஎஸ்கே... தோல்விக்கு இதுதான காரணம் - கேப்டன் ருதுராஜ்!
நடப்பு ஐபிஎல் சீசனில் கௌகாத்தியில் நடைபெற்ற 11வது போட்டியில் சென்னை அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வீழ்த்தியது.

நடப்பு ஐபிஎல் சீசனில் கௌகாத்தியில் நடைபெற்ற 11வது போட்டியில் சென்னை அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வீழ்த்தியது.
முதலில் விளையாடிய ராஜஸ்தான் 182-9 ரன்கள் எடுத்தது. நிதீஸ் ராணா 81, கேப்டன் ரியான் பராக் 37 ரன்கள் எடுத்த நிலையில் சென்னை அணி சார்ப்பில் கலீல் அகமது, நூர் அஹ்மத், பதிரனா தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சென்னை அணிக்கு ரச்சின் ரவீந்திரா ஏமாற்றத்தைக் கொடுக்க கேப்டன் ருதுராஜ் 63 ரன்கள் எடுத்தார். ஆனால், ராகுல் திரிபாதி 23, சிவம் துபே 18, விஜய் சங்கர் 9 ரன்களில் அவுட்டாக, ஜடேஜா 32, தோனி 16 ரன்கள் எடுத்துனர்.
20 ஓவரில் 176-6 ரன்கள் மட்டுமே எடுத்த சென்னை இரண்டாவது தோல்வியை பதிவு செய்தது. ஒரு காலத்தில் அசால்டாக 200 ரன்களை சேசிங் செய்யக்கூடிய சென்னை இப்போது 180 கூட அடிக்க முடியாமல் திணறியுள்ளது.
இந்த நிலையில் தோல்வி தொடர்பில் பேசிய கேப்டன் ருதுராஜ், பவர்பிளேவில் ரன்கள் எடுக்காதது தோல்விக்கு காரணம் என்று கூறியுள்ளார்.
பவர்பிளே முக்கிய தருணம். நிதிஷ் சிறப்பாக பேட்டிங் செய்தார். நாங்கள் அவரை விக்கெட்டுக்கு முன்பாக விளையாட வைத்திருக்க வேண்டும். 8 – 10 ரன்கள் சுமாரான ஃபீல்டிங் காரணமாக விட்டோம். 180 தொடக்கூடிய இலக்கு. சரியாக விளையாடினால் அதை செய்திருக்க முடியும்.
கடந்த வருடங்களில் ரஹானே, ராயுடு ஆகியோர் மிடில் ஆர்டரை கவனித்துக் கொண்டனர். எனவே திரிபாதி துவக்க வீரராக அதிரடியாக விளையாட நான் மிடில் ஆர்டரில் கொஞ்சம் தாமதமாக வந்தால் சரியாக இருக்கும் என்று நினைத்தேன்.
எப்படியிருந்தாலும் அதை காரணமாக சொல்ல முடியாது. துரதிஷ்டவசமாக எங்களுக்கு பேட்டிங்கில் நல்ல துவக்கம் கிடைக்கவில்லை. இவற்றை சரி செய்யும் போது முடிவுகள் வித்தியாசமாக வரும் என்றார்.