இந்திய அணிக்காக ரிங்கு சிங்கை தயார் செய்த ஜாம்பவான் யார் தெரியுமா? அதிரடியின் ரகசியம் இதுதான்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ரிங்கு சிங், 14 பந்துகளில் 22 ரன்கள் அடித்து இருந்தார்.

இந்திய அணிக்காக ரிங்கு சிங்கை தயார் செய்த ஜாம்பவான் யார் தெரியுமா? அதிரடியின் ரகசியம் இதுதான்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டிகளில் அதிரடி ஆட்டத்தால் பட்டையைக் கிளப்பியுள்ள இளம் வீரர் ரிங்கு சிங், இது எல்லாமே இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் விவிஎஸ் லக்ஷ்மனின் திட்டத்தின்படி தான் நடக்கிறது என வெளிப்படையாக கூறி உள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ரிங்கு சிங், 14 பந்துகளில் 22 ரன்கள் அடித்து இருந்தார். இரண்டாவது டி20 போட்டியில் கடைசி 2 ஓவர்களில் இறங்கிய ரிங்கு சிங் 9 பந்துகளில் 31 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலிய அணியை நிலைகுலைய வைத்தார். 

இரண்டாவது போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்ற பின் பேசிய ரிங்கு சிங், அணியில் தனக்கு கொடுக்கப்பட்ட வேலை சில ஓவர்கள் இறங்கி அதிரடி ஆட்டம் ஆட வேண்டியது தான் எனக் கூறினார். இந்திய அணியின் தற்காலிக பயிற்சியாளர் விவிஎஸ் லக்ஷ்மன் தன்னை அதற்காக தயார் ஆகுமாறு கூறியதாகவும் ரிங்கு சிங் தெரிவித்தார்.

விவிஎஸ் லக்ஷ்மன் இயல்பாகவே சற்று அதிரடி மனநிலை கொண்டவர். ரிங்கு சிங் இயல்பாகவே அதிரடி ஆட்டம் ஆடும் குணம் கொண்டவர். அவரை அதற்காக மட்டுமே பயிற்சி செய்ய சொல்லி அவரை 100 சதவீத பினிஷராகவே மாற்றி இருக்கிறார் லக்ஷ்மன்.

ஐபிஎல் தொடர் முடிந்தது முதல் ரிங்கு சிங், இந்திய அணியில் ஆடிய போதெல்லாம் விவிஎஸ் லக்ஷ்மன் அணியின் பயிற்சியாளராக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp