அணிக்குள் வரப்போகும் ஸ்டார் வீரர்.. 2 இளம் வீரர்களுக்கும் வாய்ப்பு... சென்னை அணி அதிரடி!

நடு வரிசையில் சிஎஸ்கே அணி தடுமாறி வரும் நிலையில், அந்த இடத்தில் இரண்டு இளம் வீரர்களை பயன்படுத்த சிஎஸ்கே முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. 

அணிக்குள் வரப்போகும் ஸ்டார் வீரர்.. 2 இளம் வீரர்களுக்கும் வாய்ப்பு... சென்னை அணி அதிரடி!

நடப்பு ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களுக்கு ஏமாற்றம் கொடுத்து வருகின்றது. சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசை படும் மோசமாக உள்ள நிலையில், சிஎஸ்கே அணியில் பல அதிரடி மாற்றங்களை நிகழ்த்த வேண்டும் என பலரும் வலியுறுத்தி வந்தனர். 

இந்த நிலையில், டெல்லிக்கு எதிரான சென்னையில் நாளை நடைபெறும் போட்டியில் பல மாற்றங்களுடன் சென்னை அணி களமிறங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. 

தொடக்க வீரராக ருதுராஜ் விளையாட வேண்டும் என பலரும் கூறி வரும் நிலையில், நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரரான கான்வேயை மீண்டும் அணிக்குள் கொண்டு வந்து தொடக்க வீரராக விளையாட வைக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. 

இதனை வரும் போட்டியில் சிஎஸ்கே செய்ய இருப்பதாகவும், இதன் காரணமாக ரச்சின் ரவீந்திரா மூன்றாவது வீரராக விளையாட வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. 

அத்துடன், நடு வரிசையில் சிஎஸ்கே அணி தடுமாறி வரும் நிலையில், அந்த இடத்தில் இரண்டு இளம் வீரர்களை பயன்படுத்த சிஎஸ்கே முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது. 

அதன்படி இளம் வீரர் சாயிக் ரசித் மற்றும் விக்கெட் கீப்பரான வன்ஷ் பேடி ஆகியோரை பயன்படுத்த வாய்ப்பு உள்ளது.

இதேபோன்று சிஎஸ்கே அணி அன்சூல் கம்போஜை பிளேயிங் லெவனுக்குள் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கான்வே உள்ளே வந்தால் சாம் கரண் அல்லது ஜிம்மி ஓவர்டன் என இரண்டு வீரர்களுமே வெளியே செல்ல வேண்டிய நிலை இருக்கும்.

எனவே, கூடுதல் வேகப்பந்துவீச்சாளராக இந்திய வீரரை பயன்படுத்த சிஎஸ்கே முடிவெடுத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.