தலைகீழாக மாறிய போட்டி - கடைசி நாளில் இந்தியா வெல்ல முடியுமா? இதை செய்தாலே போதும்!

வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி இந்திய அணியின் அதிரடி ஆட்டத்தால் தலைகீழாக மாறி இருக்கிறது. வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பு அதிகமாகும்.

தலைகீழாக மாறிய போட்டி - கடைசி நாளில் இந்தியா வெல்ல முடியுமா? இதை செய்தாலே போதும்!

வங்கதேச அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி இந்திய அணியின் அதிரடி ஆட்டத்தால் தலைகீழாக மாறி இருக்கிறது. வங்கதேசத்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பு அதிகமாகும்.

இந்த நிலையில், கான்பூரில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் முதல் நாளில் வெறும் 35 ஓவர்கள் மட்டுமே வீசப்பட்டதுடன், இரண்டாவது நாள் மற்றும் மூன்றாவது நாள் போட்டி முற்றிலுமாக கைவிடப்பட்டது.

இதனையடுத்து, நான்காவது நாள் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியதுடன், வங்கதேச அணி முதல் இன்னிங்ஸில் 233 ரன்களில் ஆட்டமிழந்தது.

அடுத்து களமிறங்கிய இந்திய அணி அதிரடியாக விளையாடி பல சாதனைகளை படைத்தது. ரோகித் சர்மா, தான் எதிர்கொண்ட முதல் இரண்டு பந்துகளில் சிக்ஸர்கள் அடித்து அசத்தினார். ஜெய்ஸ்வால் 51 பந்துகளில் 72 ரன்கள் குவித்தார். கே எல் ராகுல் அபாரமாக விளையாடி 43 பந்துகளில் 68 ரன்கள் எடுத்தனர். 

இந்த நிலையில், இந்திய அணி 34.4 ஓவர்களில் 285 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அப்போது கேப்டன் ரோகித் சர்மா டிக்ளேர் செய்வதாக அறிவித்தார். இதை அடுத்து 53 ரன்கள் பின்தங்கிய வங்கதேச அணி இரண்டாவது இன்னிங்சில் களம் இறங்கியது.

இதில் தொடக்க வீரர் ஜாகிர் ஹசன் 10 ரன்களிலும், ஹசன் மகமத் நான்கு ரன்களிலும், அஸ்வின் பந்துவீச்சில் பெவிலியின் திரும்பினர். இதனால் வங்கதேச அணி நான்காவது நாள் ஆட்டநேரம் முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 26 ரன்கள் எடுத்துள்ளது. 

147 ஆண்டுக்கால வரலாற்றில்... ஒரே நாளில் இந்திய அணி படைத்த  5 சாதனைகள்..  கெத்து காட்டிய ரோஹித் படை!

இன்னும் வங்கதேச அணி இந்திய அணியின் ஸ்கோரை விட 26 ரன்கள் பின்தங்கி இருக்கிற நிலையில், இந்திய அணி வெற்றி பெற வேண்டும் என்றால் ஐந்தாவது நாள் ஆட்டத்தில் மதியநேர உணவு இடைவேளை அல்லது தேநீர் இடைவேளைக்குள் வங்கதேச அணியில் எஞ்சி இருக்கும் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும். 

அப்படி நடந்தால், இந்தியாவை விட வங்கதேச அணி 50 ரன்கள் அல்லது 100 ரன்களோ அல்லது 150 ரன்கள் கூடுதலாக அடித்திருந்தால் எஞ்சி இருக்கும் ஓவர்களில் இந்திய அணி மீண்டும் அதிரடியாக விளையாடி இலக்கை எட்ட வேண்டும். இதனால் வங்கதேச அணியை இரண்டாவது இன்னிங்ஸில் 100 அல்லது 150 ரன்களுக்குள் இந்தியா சுருட்ட வேண்டும். 

அப்படி நடக்கும் பட்சத்தில் இந்தியா நான்காவது இன்னிங்ஸில் 100 ரன்கள் அடித்தால் வெற்றி பெற முடியும் என்ற நிலை ஏற்படும். இதன் மூலம் இந்தியா வெற்றி பெற வாய்ப்பு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...