வீரர்களுக்கு சம்பளம் கட்... களதடுப்பில் சொதப்பினால் பெனால்ட்டி... அணி நிர்வாகத்தின் அதிரடி தீர்மானத்தால் அதிர்ச்சி

முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 360 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து இருந்தது. பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் மூன்றுமே சொதப்பலாக இருந்தது. 

வீரர்களுக்கு சம்பளம் கட்... களதடுப்பில் சொதப்பினால் பெனால்ட்டி... அணி நிர்வாகத்தின் அதிரடி தீர்மானத்தால் அதிர்ச்சி

ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரில் பங்கேற்று உள்ள பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு  பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பின் தேர்வுக் குழு தலைவர் முகமது ஹபீஸ் புதிய தண்டனையை அறிவித்து இருக்கிறார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் ஃபீல்டிங்கில் சொதப்புவது, கேட்ச்சுகளை நழுவ விடுவது, ரன் அவுட் வாய்ப்புகளை கோட்டை விடுவது என மோசமாக செயல்பட்டு வருகின்றனர்.

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் முதல் போட்டியிலும் நிறைய கேட்ச் வாய்ப்புகள் மற்றும் ஃபீல்டிங்கில் ரன்களை கட்டுப்படுத்தும் வாய்ப்புகளை அந்த அணி கோட்டை விட்டது.

140 கிலோமீற்றர் வேகத்தில் தலையை தாக்கிய பந்து.. அடுத்து கையில்... வலியால் துடித்த இந்திய வீரர்... பரபரப்பு சம்பவம்!

முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி 360 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து இருந்தது. பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் மூன்றுமே சொதப்பலாக இருந்தது. 

இந்த நிலையில், அடிபட்டு விடும் என கீழே விழுந்து ஃபீல்டிங் செய்யாமல் தவிர்ப்பது, சோம்பேறித்தனப்பட்டு பந்தை பவுண்டரிக்கு விடுவது, கேட்சுகளை கோட்டை விடுவது என மோசமாக செயல்படும் வீரர்களுக்கு தண்டனை கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இனி எந்த வீரராவது பீல்டிங்கில் சொதப்பினால் 500 டாலர் அபராதம் விதிக்கப்படும் என ஹபீஸ் அறிவித்து உள்ளார். இந்த விஷயத்தால் பாகிஸ்தான் வீரர்கள் பலர் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தற்போது பாகிஸ்தான் அணி இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடி வருகிறது. முதல் நாள் மழையால் போட்டி தடைப்பட்டு நடந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 66 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் குவித்தது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp