இந்தியா - வங்கதேசம் கிரிக்கெட் தொடருக்கு கடும் எதிர்ப்பு.. பின்னணி என்ன?

முதல் போட்டி வரும் செப்டம்பர் 19ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் துவங்க உள்ளதால், வங்கதேச வீரர்கள் சென்னைக்கு வந்துள்ளனர்.

இந்தியா - வங்கதேசம் கிரிக்கெட் தொடருக்கு கடும் எதிர்ப்பு.. பின்னணி என்ன?

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள வங்கதேச அணிக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மகாசபா என்ற அமைப்பு போராட்டங்களை நடத்த உள்ளதாக அறிவித்து உள்ளது. 

அத்துடன், வங்கதேச டெஸ்ட் தொடரை ரத்து செய்ய வேண்டும் என சமூக வலைதளங்களிலும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளதுடன், Cancel Bangladesh Series என்ற ஹேஷ்டெக் வைரலாகி வருகின்றது.

இந்திய அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் வங்கதேச அணி விளையாட உள்ளதுடன், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் அந்த அணி விளையாட உள்ளது. 

ரோஹித் சர்மாவுக்கு இவ்வளவுதான் தர முடியும்: மும்பை அணி பிடிவாதம்.. காரணம் என்ன?

முதல் போட்டி வரும் செப்டம்பர் 19ஆம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் துவங்க உள்ளதால், வங்கதேச வீரர்கள் சென்னைக்கு வந்துள்ளனர்.

இந்த நிலையில், சென்னையில் அவர்களுக்கு எதிர்ப்பு இல்லை என்றாலும் கான்பூரில் நடக்க உள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டி மற்றும் குவாலியரில் நடைபெற உள்ள முதல் டி20 போட்டியின் போது போராட்டங்கள் நடத்தப்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

அத்துடன்,  இது குறித்து இந்து மகாசபாவின் துணைத் தலைவர் ஜெய்வீர் பரத்வாஜ், "வங்கதேசத்தில் இந்துக்கள் கொல்லப்படுகின்றனர். கோவில்கள் இடிக்கப்பட்டு வருகின்றன. எனவே, இந்து மகாசபா இந்தியா மற்றும் வங்கதேச கிரிக்கெட் போட்டி நடக்க உள்ள குவாலியரில் எதிர்ப்பு தெரிவிக்கும்." என கூறி இருக்கிறார்.

இதை அடுத்து கான்பூர் மற்றும் குவாலியரில் நடக்க உள்ள போட்டிகள் வேறு மைதானத்திற்கு மாற்றப்படுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளதுடன், இதற்கு பதில் அளித்த பிசிசிஐ அதிகாரி ஒருவர், எந்த சூழ்நிலையிலும் போட்டிகள் இடம் மாற்றப்படாது என கூறி உள்ளார்.

எனினும், கடைசி நேரத்தில் மாற்றங்கள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளதுடன்,  வங்கதேச அணி தங்களுக்கான பாதுகாப்பு குறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷாவிடம் பேசி உள்ளனர். 

இதனையடுத்து, அவர் வங்கதேச அணிக்கு அதிகபட்ச பாதுகாப்பு அளிக்கப்படும் என உறுதி அளித்து இருக்கிறார். இந்த எதிர்ப்பு விவகாரம் இந்திய அணி வீரர்களின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாகவே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் அலைபேசியில் பெற்றுக்கொள்ள Colomboதமிழ் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


NEWS21
Colomboதமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து Follow செய்யுங்கள்...

NEWS21
Colomboதமிழ் Youtube சேனலை இங்கே கிளிக் செய்து Subscribe செய்யுங்கள்...