தோல்விக்கு காரணம் இதுதான்.. உண்மையை உடைத்த கங்குலி... தவறு செய்தது யார்?
இந்திய அணி மோசமாக செயல்பட்ட நிலையில், இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் என்ன என்பதை அவர் விளக்கி இருக்கிறார்.
ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரை இந்திய அணி 1 - 2 என இழந்த நிலையில், அது தொடர்பில் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்து உள்ளார்.
இந்த தொடரில் இந்திய அணி மோசமாக செயல்பட்ட நிலையில், இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் என்ன என்பதை அவர் விளக்கி இருக்கிறார்.
இந்திய அணியில் வேகப் பந்துவீச்சாளர் பும்ரா மட்டுமே இந்த தொடரில் சிறப்பாக செயல்பட்டு அனைத்து போட்டிகளிலும் விக்கெட்களை வீழ்த்திய நிலையில், பேட்ஸ்மேன்கள் படுமோசமான முறையில் செயல்பட்டனர்.
விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகிய இருவரும் குறைந்த ரன்களே எடுத்ததுடன், விராட் கோலி ஒரு சதம் அடித்த போதும் 8 இன்னிங்ஸ்களில் 90 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
இந்த நிலையில், இந்திய அணி 10 இன்னிங்ஸ்களில் மூன்று முறை மட்டுமே 200 ரன்களுக்கும் அதிகமான ஸ்கோரை எடுத்ததுதான் இந்த தொடரில் இந்திய அணி தோல்வி அடைய முக்கிய காரணம் என கங்குலி சுட்டிக்காட்டி இருக்கிறார்.
அத்துடன், குறைந்தது 350 - 400 ரன்கள் எடுத்தால் தான் வெற்றி பெற முடியும் எனஅவர் குறிப்பிட்டு உள்ளார்.
"டெஸ்ட் கிரிக்கெட்டில் நன்றாக பேட்டிங் செய்யாவிட்டால் டெஸ்ட் போட்டிகளை வெல்ல முடியாது. வெறும் 170, 180 ரன்களை அடித்து விட்டு டெஸ்ட் போட்டிகளை வெல்ல முடியாது. 350 முதல் 400 ரன்கள் வரை எடுத்தால்தான் டெஸ்ட் போட்டிகளை வெல்ல முடியும்." என கங்குலி கூறி உள்ளார்.
மேலும், இந்திய அணியில் அனைவருமே ரன் குவித்து இருக்க வேண்டும் என்றும், மூத்த வீரர்களான விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இந்த தொடரில் படுமோசமாக செயல்பட்டனர் என்றும் அவர் சுட்டிக்காட் உள்ளார்.
அத்துடன், விராட் கோலி 8 இன்னிங்ஸ்களில் எட்டு முறையும் ஒரே தவறை மீண்டும், மீண்டும் செய்து ஆட்டமிழந்ததாக கூறிய அவர் ரோஹித் சர்மா ஒரு போட்டியில் கூட 10 ரன்களை தாண்டி ரன் சேர்க்கவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.