சொந்த மண்ணில் படுதோல்வி... தோல்விக்கு இந்த தவறுதான் காரணம்... ரியான் பராக் வேதனை!
முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, இருபது ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் மட்டுமே எடுத்தது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த நிலையில், 20 ரன்கள் குறைவாக எடுத்ததுதான் தோல்விக்கு முக்கிய காரணம் என ராஜஸ்தான் கேப்டன் ரியான் பராக் வேதனை வெளியிட்டார்.
அத்துடன், ரியான் பராக்கின் சொந்த மைதானத்தில் சரியாக ஆடாதது குறித்தும் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.
இந்தப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, இருபது ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 151 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அடுத்து பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, 17.3 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டியதுடன், குயின்டன் டி காக் 61 பந்துகளில் 97 ரன்கள் எடுத்திருந்தார்.
தோல்விக்குப் பிறகு பேசிய ரியான் பராக், 170 ரன்கள் என்பது நல்ல ஸ்கோராக இருந்திருக்கும் என்றும், இங்கு இருக்கும் விக்கெட் குறித்து தெரியும் என்பதால், தான் சற்று விரைவாக விளையாடலாம் என்று நினைத்தாக கூறினார்.
ஆனால், இறுதியில் 20 ரன்கள் குறைவாக எடுத்த நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் குயின்டன் டி காக்கை விரைவாக ஆட்டமிழக்கச் செய்ய வேண்டும் என்ற திட்டம் நடக்கவில்லை என்றும் குறிப்பிட்டார்.
கடந்தாண்டு அணி தன்னை நான்காம் வரிசையில் விளையாடுமாறு சொன்னதால் அதை தான் செய்த நிலையில், இந்த ஆண்டு என்னை மூன்றாம் வரிசையில் இறங்குமாறு சொன்னதால், ஒரு தொழில்முறை கிரிக்கெட் வீரராக, அணிக்கு கட்டுப்பட்டு நான் ஏற்றுக்கொண்டு செய்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
இந்த முறை அணியில் இளம் வீரர்கள் அதிக அளவில் உள்ளதால், ஒட்டுமொத்தமாக நல்ல விதமாக போட்டிகளை விளையாடி, போட்டியின் முடிவுகளை எங்களுக்கு சாதகமாக மாற்ற வேண்டும். தவறுகளை நாங்கள் புரிந்து கொண்டு, அதை இனி செய்யாமல் இருக்க முயற்சி செய்வோம் என்நு அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.