சாம்பியன்ஸ் கோப்பையை வெல்லப்போகும் அணி இதுதான்... கங்குலியின் கணிப்பு
இந்த தொடரில் இந்தியா வலுவான போட்டியாளராக இருக்கும் என்று முன்னாள் இந்திய வீரர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி போட்டி எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய நாடுகளில் நடைபெற உள்ளது
இந்த நிலையில், இந்த தொடரில் இந்தியா வலுவான போட்டியாளராக இருக்கும் என்று முன்னாள் இந்திய வீரர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
இந்திய அணித் தலைவர் ரோகித் சர்மா சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
"50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பை ஆகியவற்றில் நாம் சிறப்பாக செயல்பட்டோம். வெள்ளை பந்து கிரிக்கெட்டில், ரோகித் அபாரமானவர். சாம்பியன்ஸ் டிராபி தொடங்கும் போது, வேறுபட்ட ரோகித் சர்மாவைக் காண்பீர்கள்" என்று கங்குலி குறிப்பிட்டுள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா தனது வங்காளதேசத்திற்கு எதிராக முதல் போட்டியை தொடங்கவுள்ளதுடன், இந்திய அணி சனிக்கிழமை அறிவிக்கப்பட்டது.
2013 ஆம் ஆண்டில் எம்.எஸ். தோனி தலைமையில் இந்த அணி வெற்றி பெற்றதுடன், 2017 ஆம் ஆண்டில் இந்திய அணி இரண்டாவது இடத்தைப் பிடித்தது.
இந்திய கிரிக்கெட் அண்மைகாலமாக எதிர்கொண்ட பின்னடைவுகளை தொடர்ந்து, இந்த போட்டி தொடர்பில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளது.
இந்த தொடரில் கோலி தனது உச்சக்கட்ட பார்முக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. சாம்பியன்ஸ் டிராபி போன்ற பெரிய தொடரில் கோலி கடந்த காலங்களில் ரன் குவிப்பில் ஈடுபட்டாலும், இந்த தொடரில் அவர் ஒரு முறை கூட சதம் அடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.