கோழி இறைச்சியின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்!
கால்நடை தீவனத்துக்கு வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ள நிலையில், கோழிப்பண்ணை உற்பத்தியாளர்களும் மக்களுக்கு சலுகைகளை வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியை டிசெம்பர் மாதத்துக்குள் 850 ரூபாய்க்கு மக்களுக்கு வழங்க எதிர்பார்ப்பதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ கூறினார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர், இதனைக் குறிப்பிட்டார்.
கால்நடை தீவனத்துக்கு வரிச்சலுகை வழங்கப்பட்டுள்ள நிலையில், கோழிப்பண்ணை உற்பத்தியாளர்களும் மக்களுக்கு சலுகைகளை வழங்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
டிசெம்பர் மாத பண்டிகை காலங்களில் தேவைப்பட்டால் முட்டை இறக்குமதி செய்யப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.