21 வயது இளம் வீரரை வைத்து இந்தியாவுக்கு ஆப்பு வைத்த இலங்கை.. மாறிய ஆட்டம்!
அப்போது இலங்கை அணியின் கேப்டன் அசலங்கா 2 பந்துகளில் சிவம் துபே மற்றும் அர்ஷ்தீப் சிங்கின் விக்கெட்டை வீழ்த்தி இந்திய அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டியில் வெற்றிக்கு 1 ரன்கள் மட்டுமே தேவையாக இருந்த நிலையில், இலங்கை அணியின் வெற்றிக்கு 2 விக்கெட்டுகள் தேவைப்பட்டது.
அப்போது இலங்கை அணியின் கேப்டன் அசலங்கா 2 பந்துகளில் சிவம் துபே மற்றும் அர்ஷ்தீப் சிங்கின் விக்கெட்டை வீழ்த்தி இந்திய அணிக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 230 ரன்களை சேர்த்தது. இலங்கை அணி 200 ரன்களை எட்டவே வாய்ப்பில்லை என்று பார்க்கப்பட்ட நிலையில், 21 வயது இளம் வீரர் வெல்லாலகே ரன்களை குவித்தார்.
சிறப்பாக ஆடிய வெல்லாலகே 65 பந்துகளில் 2 சிக்ஸ், 7 பவுண்டரி உட்பட 67 ரன்களை விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதன்பின் களமிறங்கிய இந்திய அணி அதிரடியாக ரன்களை குவித்த நிலையில், முதல் விக்கெட்டை வீழ்த்த முடியாமல் இலங்கை பவுலர்கள் திணறிய நிலையில், மீண்டும் வெல்லாலகே களமிறங்கினார்.
சுப்மன் கில் 16 ரன்களிலும், ரோஹித் சர்மாவை 58 ரன்களிலும் வீழ்த்தி இலங்கை அணிக்கு வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தினார்.
தொடர்ந்து வந்த இந்திய பேட்ஸ்மேன்கள் வெல்லாலகே பவுலிங்கை தயக்கத்துடனே எதிர்கொண்ட நிலையில், வெல்லாலகே 9 ஓவர்களை வீசி ஒரு மெய்டன் உட்பட 39 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த நிலையில், இலங்கை அணியின் 21 வயதாகும் வெல்லாலகே இந்திய அணியின் வெற்றியை தடுத்து நிறுத்தியதுடன், இந்திய அணி ஆடிய முதல் ஒருநாள் போட்டி இதுவாகும்.
கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்று முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி களமிறங்கி விளையாடிய போட்டி சமனில் முடிவடைந்துள்ளது.
டி20 தொடரில் கடைசி போட்டியை டிரா செய்து இந்திய அணி சூப்பர் ஓவர் மூலமாக வென்றது. அந்த போட்டியில் சூர்யகுமார் யாதவ் பவுலிங் செய்து போட்டியை இந்தியா பக்கம் திருப்பினார்.
அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இலங்கை அணியின் கேப்டன் அசலங்கா பவுலிங் செய்து 2 விக்கெட்டுகளை எடுத்து போட்டியை டிரா செய்துள்ளது.