உலக சாதனை படைத்த சிஎஸ்கே... டி20 வரலாற்றிலேயே அதிக ரன்கள்... ரெக்கார்ட் தகர்ப்பு!
இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 35வது 200க்கும் அதிகமான ரன் குவிப்பாக காணப்படுகின்றது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிரான 46வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்ததுடன், இது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் 35வது 200க்கும் அதிகமான ரன் குவிப்பாக காணப்படுகின்றது.
2008 முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 35 முறை 200க்கும் அதிகமாக ரன் குவித்து சாதனை படைத்து உள்ளது. ஐபிஎல் தொடரில் மட்டும் 32 முறை 200க்கும் அதிகமான ரன்களை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குவித்துள்ளது.
இங்கிலாந்து கவுன்டி அணியான சமர்செட் டி20 போட்டிகளில் 34 முறை 200க்கும் அதிகமாக ரன் சேர்த்து இருந்த சாதனையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முறியடித்து இருக்கிறது.
இந்த ரன் குவிப்பு பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணி (31) மூன்றாவது இடத்திலும், ஐபிஎல் அணியான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (31) நான்காவது இடத்திலும் உள்ளதுடன், இங்கிலாந்து கவுன்டி அணியான யார்க்ஷயர் (29 ) ஐந்தாவது இடத்திலும் உள்ளது சுட்டிக்காட்டத்தக்கது.
அதிக ரன் குவித்த அணிகள் பட்டியல்
- சென்னை சூப்பர் கிங்ஸ் (ஐபிஎல்) 35
- சமர்செட் (இங்கிலாந்து) 34
- இந்தியா (தேசிய அணி) 32
- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஐபிஎல்) 31
- யார்க்ஷயர் (இங்கிலாந்து) 29
- சர்ரே (இங்கிலாந்து) 28
இதேவேளை, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.