புஜாராவுக்கு பிசிசிஐ திடீர் அழைப்பு: கம்பீர் எதிர்ப்பையும் மீறி ஜெய் ஷா முடிவு! 

இந்திய ஏ அணிக்கு எதிராக இந்திய வீரர்கள் பெர்த்தில் பயிற்சி மேற்கொண்டிருந்த நிலையில், ஷுப்மன் கில்லுக்கு கையில் காயம் ஏற்பட்டது. 

புஜாராவுக்கு பிசிசிஐ திடீர் அழைப்பு: கம்பீர் எதிர்ப்பையும் மீறி ஜெய் ஷா முடிவு! 

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடர் நவம்பர் 22ஆம் தேதி துவங்க உள்ள நிலையில், அதற்காக இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில், இந்திய ஏ அணிக்கு எதிராக இந்திய வீரர்கள் பெர்த்தில் பயிற்சி மேற்கொண்டிருந்த நிலையில், ஷுப்மன் கில்லுக்கு கையில் காயம் ஏற்பட்டது. 

இதனைத் தொடர்ந்து, அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கில்லை அழைத்துச் சென்ற நிலையில், அவரின் கையில் எழும்பு முறிவு இருப்பது தெரிய வந்துள்ளது. இது லேசான காயம் என்பதால், 2 வாரங்களில் இக்காயம் சரியாகிவிடும். இதனால், ஷுப்மன் கில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என்பது உறுதியாகிவிட்டது.

இந்நிலையில், ஷுப்மன் கில்லுக்கான மாற்று வீரரை தேர்வு செய்வது குறித்து, பிசிசிஐ ஆவசர ஆலோசனை மேற்கொண்டது. அப்போது பேசிய கம்பீர், ‘‘ஷுப்மன் கில்லுக்கு மாற்றாக சாய் சுதர்ஷனை அணியில் சேர்க்க விரும்புகிறேன். சுதர்ஷனை சேர்க்க முடியவில்லை என்றால், பேக்கப்பாக தேவ்தத் படிக்கல்லை சேர்த்துக்கொள்ளலாம்’’ எனத் தெரிவித்திருக்கிறார். 

இதற்கு, பிசிசிஐயும் ஒப்புதல் வழங்கியுள்ளதால், இந்திய ஏ அணியில் இடம்பெற்றிருக்கும் சுதர்ஷன் மற்றும் படிக்கல் இருவரும் ஆஸ்திரேலியாவிலேயே தங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இது ஒருபுறம் இருக்க, சேத்தேஸ்வர் புஜாராவை தயார் நிலையில் இருக்க சொல்லி, பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் ஆகியோர், மின்னஞ்சல் மூலம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. 

புஜாராவைதான் தேர்வுக்குழு தலைவர் அகார்கர், செயலாளல் ஜெய் ஷா ஆகியோர் முதலில் தேர்வு செய்திருக்கிறார்கள். ஆனால், கம்பீர் இதற்கு ஒப்புக்கொள்ளாமல் இளம் வீரர்களை தேர்வு செய்திருக்கிறார்.

இந்த குழப்பத்தால்தான், இன்னமும் ஷுப்மன் கில்லுக்கான மாற்று வீரரை அறிவிக்காமல் வைத்திருக்கிறார்கள். இந்நிலையில், கில்லுக்கு மாற்றாக புஜாராவை ஆஸ்திரேலியாவுக்கு அனுப்ப அதிக வாய்ப்பு இருப்பதாகவும், சுதர்ஷன் அல்லது படிக்கல் இருவரில் ஒருவர் பேக்கப் வீரராகவும் சேர்க்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

இன்று அல்லது நாளை முதல் டெஸ்டில் கில்லுக்கான மாற்று வீரர் அறிவிக்கப்படும். நியூசிலாந்து டெஸ்ட் தொடரில், தோற்றதால் கம்பீர் முடிவுகள், திட்டங்கள் மீது பிசிசிஐ அதிருப்தியில் இருக்கிறது. இதனால், இம்முறை கம்பீர் பேச்சை கேட்காமல், புஜாராவைதான் கில்லுக்கு மாற்றாக தேர்வு செய்ய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp