அணியில் இடமில்லை... புஜாராவுக்கு ஏற்பட்டுள்ள நிலை.. ரசிகர்கள் ஷாக்!

அண்மைய காலமாக இந்திய அணியில் விளையாட வாய்ப்பு இன்றி தவித்து வரும் புஜாரா அதிரடியாக ஒரு முடிவை எடுத்து இந்த தொடருக்கான வர்ணனையாளராக மாறி இருக்கிறார்.

அணியில் இடமில்லை... புஜாராவுக்கு ஏற்பட்டுள்ள நிலை.. ரசிகர்கள் ஷாக்!

அண்மைய காலமாக இந்திய அணியில் விளையாட வாய்ப்பு இன்றி தவித்து வரும் புஜாரா அதிரடியாக ஒரு முடிவை எடுத்து இந்த தொடருக்கான வர்ணனையாளராக மாறி இருக்கிறார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பார்டர் - கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் விளையாட உள்ள நிலையில், அந்த தொடருக்கான இந்திய அணியில் தனக்கு இடம் கிடைக்கும் என புஜாரா எதிர்பார்த்து இருந்தார். 
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக மிகச் சிறந்த ரெக்கார்டை வைத்துள்ள போதும், இந்திய அணியில் புஜாராவுக்கு  வாய்ப்பு கிடைக்கவில்லை. 

இந்த நிலையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியின் இந்தி பதிப்பில் புஜாரா வர்ணனையாளராக செயல்பட உள்ளது உறுதியாகி உள்ளதால், அணியில் விளையாட வேண்டிய புஜாரா, வர்ணனையாளராக மாறி இருப்பது இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 45 இன்னிங்ஸ்களில் 2074 ரன்கள் சேர்த்துள்ள  புஜாராவின் சராசரி 49.38 ஆகும் என்பதுடன், 5 சதங்கள் மற்றும் 11 அரை சதங்களை அடித்து இருக்கிறார். 

மற்ற இந்திய பேட்ஸ்மேன்கள் டெஸ்ட் போட்டிகளில் நீண்ட நேரம் நின்று பேட்டிங் செய்ய திணறிவரும் நிலையில் ஆஸ்திரேலிய மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் 21 இன்னிங்ஸ்களில் 993 ரன்கள் எடுத்து உள்ளதுடன்,  2657 பந்துகளை ஆஸ்திரேலிய மண்ணில் சந்தித்து இருக்கிறார்.  

கடந்த நான்கு ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர்களை இந்திய அணி வென்றதில் புஜாராவுக்கும் முக்கிய பங்கு உள்ளதுடன்,  ஆஸ்திரேலிய மண்ணில் கடந்த இரண்டு டெஸ்ட் தொடர்களை இந்திய அணி வெல்வதற்கு புஜாரா முக்கிய காரணமாக காணப்பட்டார்.

அவர் உள்ளூர் போட்டிகளில் சதம், இரட்டை சதம் என அடித்து தற்போது நல்ல ஃபார்மில் இருந்தாலும், இந்திய அணி அவரை புறக்கணித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp