ரோஹித்தால் ஒதுக்கப்பட்ட வீரர்... காயத்தோடு 91 ரன் அடித்து பதிலடி... ஷாக்கில் ரசிகர்கள்!

இந்திய அணி இவரை கண்டுகொள்வதாக தெரியவில்லை. அதற்கு முக்கிய காரணம் ரோஹித் ஷர்மா தான்.

ரோஹித்தால் ஒதுக்கப்பட்ட வீரர்... காயத்தோடு 91 ரன் அடித்து பதிலடி... ஷாக்கில் ரசிகர்கள்!

இந்திய டெஸ்ட் அணி வீரர், புஜாரா சமீப காலமாக புறக்கணிக்கப்பட்டு வருகிறார். டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023 பைனலில் ஆஸ்திரேலியாவிடம் தோற்ற பிறகு புஜாராவை சேர்க்கவில்லை. இருப்பினும், புஜாராவும் மனம் தளராமல் தொடர்ந்து, உள்ளூர் போட்டிகளில் பங்கேற்று சிறப்பாக விளையாடி வருகிறார்.

சமீபத்தில், ரஞ்சிக் கோப்பை 2024 தொடரில் பங்கேற்று விளையாடிய புஜாரா, அதில் 5 போட்டிகளில் 444 ரன்களை குவித்து பிரமிக்க வைத்தார். குறிப்பாக, இரட்டை சதம் அடித்து, உலக அளவில் அதிக இரட்டை சதங்களை அடித்த, 6ஆவது வீரர் என்ற வரலாற்று சாதனையையும் படைத்துள்ளார். 

இருப்பினும், இந்திய அணி இவரை கண்டுகொள்வதாக தெரியவில்லை. அதற்கு முக்கிய காரணம் ரோஹித் ஷர்மா தான். முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் இருந்து விராட் கோலி விலகியப் பிறகு, அவரது இடத்திற்கு அனுபவ வீரரைதான் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது. 

குறிப்பாக, புஜாராவை சேர்க்கத்தான் பிசிசிஐ முடிவு செய்ததாம். ஆனால், இளம் வீரர்களுக்கு எப்போதுதான் வாய்ப்பு கொடுப்பீர்கள் எனக் கேட்ட ரோஹித் ஷர்மா, ராஜத் படிதரை சேர்த்தாக வேண்டும் என விடாப்புடியாக கேட்டதால்தான், புஜாராவை நீக்கியதாக, அப்போது செய்திகள் வெளியாகின.

கோலி வந்தா நீ காலி.. ஒரே வழிதான் இருக்கு... இளம் வீரருக்கு ஹர்பஜன் சிங் எச்சரிக்கை!

முதல் டெஸ்டில் 28 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றப் பிறகு, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இருந்து கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா இருவரும் காயம் காரணமாக விலகினார்கள். மிடில் வரிசையில் ராகுலுக்கு மாற்றாக, இப்போதாவது புஜாரா சேர்க்கப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. 

ஆனால், இம்முறையும் சர்பரஸ் கானுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஸ்பின்னர் ஜடேஜாவுக்கு மாற்றாக இரண்டு ஸ்பின்னர்கள் வாஷிங்டன் சுந்தர், சௌரப் குமார் ஆகியோரை சேர்த்துள்ளனர். இதன்மூலம், இனி புஜாராவுக்கு வாய்ப்பே கிடைக்காது என்பது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது.

விராட் கோலி விலகியப் பிறகும், அவர் இடத்தில் இளம் வீரர் ராஜத் படிதரை சேர்த்த நிலையில், புஜாரா தான் யார் என்பதை நிரூபிக்கும் வகையில், ரஞ்சிக் கோப்பை தொடரில் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வருகிறார். 

இதுவரை 6 போட்டிகளில் விளையாடி இருக்கும் அவர், 535 ரன்களை அடித்துள்ளளார். குறிப்பாக, சமீபத்தில் சர்வீஸ் அணிக்கு எதிராக போட்டியில், 4ஆவது நாள் ஆட்டத்தில் முதுகில் காயத்தோடு களமிறங்கிய புஜாரா, முக்கியமான நேரத்தில் 133 பந்துகளில் 91 ரன்களை அடித்து அசத்தினார். 

இதனால், இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 3 டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில், புஜாராவை சேர்க்க வேண்டும் என ரசிகர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp