இளம் அரசியல்வாதியை கரம் பிடிக்கும் இந்திய அணி வீரர் ரிங்கு சிங்! யார் தெரியுமா?
சமாஜ்வாதி கட்சி எம்.பி. பிரியா சரோஜை இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங், திருமணம் செய்ய உள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது.
சமாஜ்வாதி கட்சி எம்.பி. பிரியா சரோஜை இந்திய கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங், திருமணம் செய்ய உள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது.
கிரிக்கெட் உலகின் தலைசிறந்த ஃபினிஷராக திகழ்பவர் தோனி. தோனியின் ஓய்வுக்கு பிறகு இந்திய அணிக்கு அப்படியொரு பினிஷர் இதுவரை கிடைக்கவில்லை. அந்த ஏக்கத்தை தீர்த்து வைத்தவர் ரிங்கு சிங்.
நெருக்கடியான நேரத்தில் கடைசி ஓவரில் 5 சிக்ஸர்கள் தேவை என்ற நிலையில் 5 சிக்ஸர்களை அடுத்தடுத்து விளாசி ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்தவர்.
கடந்த 2018 ஆம் ஆண்டு, ஐபிஎல் போட்டிகளில் அறிமுகமான ரிங்கு சிங், தற்போது கொல்கத்தா அணிக்காக விளையாடிவருகிறார். இவரின் ஆட்டத்தை பார்த்து, முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தொடங்கி பல்வேறு தரப்பினர், இவரை பாராட்டி வருகின்றனர்.
கடந்தாண்டு நடந்த டி20 உலகக் கோப்பை போட்டியில் கூட இந்திய அணியின் மாற்று வீரராக இருந்தார். இந்த நிலையில், நாட்டின் இளம் பெண் எம்.பி.க்களில் ஒருவரான பிரியா சரோஜை, ரிங்கு சிங் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சமீபத்தில், இவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், திருமண தேதி இன்னும் முடிவாகவில்லை.
மச்சாலி ஷஹர் தொகுதி எம்.பி.யான பிரியா சரோஜ், சமாஜ்வாதி கட்சியை சேர்ந்தவர். மூன்று முறை எம்.பி.யாகவும், தற்போது எம்.எல்.ஏ.வாகவும் உள்ள துபானி சரோஜின் மகள்தான் பிரியா சரோஜ். அரசியலுக்கு வருவதற்கு முன், வழக்கறிஞராக இருந்துள்ளார்.
கடந்த 2024ஆம் ஆண்டு, முதல்முறையாக மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட பிரியா சரோஜ், நாடாளுமன்ற உறுப்பினரானார்.