பாகிஸ்தானை வொயிட் வாஷ் செய்து விடைபெற்றார் ஆஸி வீரர் வார்னர்!
டேவிட் வார்னருக்கு சர்வதேச கடைசி டெஸ்ட் போட்டியாகவும் அமைந்த இந்தப் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் செய்தது.
பாகிஸ்தான் அணி முதல் இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா அணியிடம் தோற்று தொடரை இழந்துவிட்டது. இந்த நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் தொடங்கி நடைபெற்றது.
டேவிட் வார்னருக்கு சர்வதேச கடைசி டெஸ்ட் போட்டியாகவும் அமைந்த இந்தப் போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
முகமது ரிஸ்வான் 88, அமீர் ஜமால் 82 ரன்கள் எடுக்க முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் 313 ரன்கள் சேர்த்தது. பேட் கம்மின்ஸ் ஐந்து விக்கெட் கைப்பற்றினார்.
ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் கொஞ்சம் தடுமாறி 299 ரன்கள் மட்டுமே அடித்தது. மார்னஸ் லபுஷேன் 60, மிட்சல் மார்ஸ் 54 ரன்கள் எடுத்தார்கள். பாகிஸ்தான் தரப்பில் அமீர் ஜமால் ஆறு விக்கெட் கைப்பற்றினார்.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் - பாகிஸ்தான் தோல்வியால் இந்தியாவுக்கு ஏற்பட்ட பின்னடைவு!
இதற்கு அடுத்து 14 ரன்கள் முன்னிலை பெற்று விளையாடிய பாகிஸ்தான் இரண்டாவது இன்னிங்ஸில் மிகவும் தடுமாற்றமாக விளையாடி ஒட்டுமொத்தமாக சரிந்தது.
பாகிஸ்தான் அணிக்கு இளம் வீரர் சையும் அயுப் 33 ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் இரண்டாவது இன்னிங்ஸில் 115 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. ஹேசில்வுட் நான்கு விக்கெட் கைப்பற்றினார்.
இதற்கு அடுத்து 13 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா அணி இரண்டு விக்கெட் மட்டும் இழந்து, எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும் டெஸ்ட் தொடரை மூன்றுக்கு பூஜ்யம் என ஒயிட் வாஷ் செய்தது.
தனது கடைசி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடிய டேவிட் வார்னர் இரண்டாவது இன்னிங்ஸில் 75 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 52 ரன்கள் எடுத்து ரசிகர்கள் முன்னிலையில் வெளியேறினார்.