ஒரே போட்டியில் ரோஹித்தையே மிரள வைத்த விக்கெட் கீப்பர்... இனி அந்த வீரருக்கு ஆப்புதான்!

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், இளம் வீரரான துருவ் ஜுரேலுக்கு வாய்ப்பு அளித்தனர். 

ஒரே போட்டியில் ரோஹித்தையே மிரள வைத்த விக்கெட் கீப்பர்... இனி அந்த வீரருக்கு ஆப்புதான்!

சரியான விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் இல்லாமல் தடுமாறி வரும் இந்திய டெஸ்ட் அணியின் கவலையை அறிமுக வீரர் துருவ் ஜுரேல் தான் ஆடிய முதல் இன்னிங்ஸிலேயே போக்கி இருக்கிறார். 

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், இளம் வீரரான துருவ் ஜுரேலுக்கு வாய்ப்பு அளித்தனர். 

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியில் ரோஹித் சர்மா 131, ரவீந்திர ஜடேஜா 112, சர்பராஸ் கான் 62 ரன்கள் குவிக்க, 6 விக்கெட் வீழ்ந்த நிலையில் இந்திய அணி 400 ரன்களை பெற பின் வரிசை வீரர்களுடன் இணைந்து துருவ் ஜுரேல் ரன் குவிக்க வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.

அஸ்வின் விலகளுக்கு இதுதான் காரணம்... பிசிசிஐயின் ரகசியத்தை லீக் செய்த ராஜீவ் சுக்லா! 

தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய துருவ் ஜுரேல்  46 ரன்கள் குவித்ததுடன், அவர் அடித்த ஒரு ஷாட் கேப்டன் ரோஹித் சர்மாவையே மிரள வைத்தது. 
இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர் மார்க் உட் வீசிய 146 கிலோமீட்டர் வேக பவுன்சர் ஒன்று அவுட்சைடு ஆஃப் திசையில் சென்றது. துருவ் ஜுரேல் ஸ்லிப் ஃபீல்டர்களின் தலைக்கு மேலே செல்லும் வகையில் பந்தை மேற்புறமாக தட்டி விட்டார். அது சிக்ஸராக மாறியது. 

இதே போன்ற அதிரடி பேட்ஸ்மேன் தான் ரிஷப் பண்ட். அதனால் தான் அவர் இல்லாமல் டெஸ்ட் அணி தடுமாறி வந்தது. அந்தக் குறையைப் போக்கி இருக்கிறார் துருவ் ஜுரேல். 

இனி ரிஷப் பண்ட் அணிக்கு திரும்பும் முன் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் துருவ் ஜுரேல் அன் குவித்தால் ரிஷப் பண்ட்டுக்கு அணியில் இடம் கிடைக்காமல் போகும் என்று பேசப்படுகின்றது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp