ஹர்திக்கால் அசிங்கப்பட்ட இலங்கை வீரர்... ரோஹித்துடன் இணைந்தார்... நடந்தது என்ன?

ஹர்திக் பாண்டியாவால் அசிங்கப்பட்ட வீரர், ரோஹித் சர்மா அணியில் சேர்ந்தமை மும்பை ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஹர்திக்கால் அசிங்கப்பட்ட இலங்கை வீரர்... ரோஹித்துடன் இணைந்தார்... நடந்தது என்ன?

ஹர்திக் பாண்டியாவால் அசிங்கப்பட்ட வீரர், ரோஹித் சர்மா அணியில் சேர்ந்தமை மும்பை ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மும்பை இந்தியன்ஸுக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக பொறுப்பேற்றதில் இருந்து, தினம் தினம் மும்பை இந்தியன்ஸ் குறித்த பேச்சு அதிகரித்தவண்ணம் இருக்கிறது.

ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது ரோஹித் சர்மா, பும்ரா, சூர்யகுமார் யாதவ் ஆகியோருக்கு பிடிக்கவில்லை. ஹர்திக் பாண்டியா கேப்டனாக பொறுப்பேற்றப் பிறகு, ரோஹித் சர்மாவுடன் பேசவே இல்லையாம். 

இதனை ஹர்திக் பாண்டியா ஒத்துக் கொண்டார். ரோஹித் இந்திய அணிக்கு கேப்டனாக இருப்பதால், அவர் பிசியாக இருப்பதால்தான் பேசவில்லை என ஹர்திக் ஓபனராக பேசியது, அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், முதல் போட்டியிலேயே ரோஹித் சர்மாவை மட்டும் தட்டும் வேலையில் ஹர்திக் ஈடுபட்டார். ரோஹித் எப்போதுவே பவுண்டரி லைனில் பீல்டிங் செய்தது கிடையாது. 

அவரை கொண்டுபோய், பவுண்டரி லைன் அருகில் நிற்க வைத்தார். இங்கு போ, அங்கு போ என ரோஹித்தை நகர்த்திக் கொண்டே இருந்தார்.

முதல் போட்டியில் தோற்ற மும்பை இந்தியன்ஸ் அணி, இரண்டாவது போட்டியில் சன் ரைசர்ஸ் அணியிடம் பலத்த அடியை வாங்கியது. சன் ரைசர்ஸை 277 ரன்களை குவிக்க வைத்து, வரலாற்று தோல்வியை சந்தித்தனர்.

அப்போட்டியில், முதல் இன்னிங்ஸ் முடிந்தப் பிறகு இரண்டாவது இன்னிங்ஸில் மும்பை களமிறங்கியபோது, பயிற்சியாளர் பொல்லார்டிடம் ஹர்திக் நின்று பேசினார். 

அப்போது, மலிங்கா சேரில் அமர்ந்த நிலையில், 'எனக்கு சேர் வேணும்' எனக் கேட்டு, மலிங்காவை எழுந்துபோக வைத்தார். மலிங்காவை எழுப்பிவிட்டு, அந்த சேரில் ஹர்திக் பாண்டியா அமர்ந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. 

குறிப்பாக, மலிங்கா கடுப்பில் எழுந்து சென்ற சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்திற்கு ரசிகர்கள் பலர் கடும் அதிருப்தியை தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில், வரும் திங்கட்கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான போட்டிக்காக மும்பை அணியினர் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள். அப்போது, மலிங்கா அதிகநேரம் பும்ரா, ஆகாஷ் மத்வால் போன்றவர்களுடன்தான் அதிக நேரம் இருந்தார். 

மேலும், ரோஹித் சர்மாவுடன் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார். ஹர்திக்குடன் சில நிமிடங்கள் மட்டும்தான் அவர் பேசிக் கொண்டிருந்தார். இது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp