அஸ்வின் இடத்துக்கு 31 வயது ஸ்பின்னரை தேர்வு செய்த கம்பீர்: விவரம் இதோ!
இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு பின்னர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவித்தார்.
இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு பின்னர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறுவதாக ரவிச்சந்திரன் அஸ்வின் அறிவித்தார்.
2014 முதல் 2024 வரை, இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களை வெல்ல அஸ்வின்தான் மிகமுக்கிய காரணமாக இருந்தார். இதனால், மேட்ச் வின்னர் ஸ்பின்னரைதான், அஸ்வினுக்கு மாற்றாக விளையாட வைத்தாக வேண்டும்.
தற்போதைய இந்திய அணியில் அஸ்வினுக்கு மாற்றாக வாஷிங்டன் சுந்தர் இருக்கிறார். அஸ்வினுக்கு மாற்றாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி இரண்டு டெஸ்ட்களில் வாஷிங்டன் சுந்தர்தான் விளையாட உள்ளார்.
இந்நிலையில், அஸ்வினுக்கு மாற்றாக, ரஞ்சிக் கோப்பையில் தொடர்ந்து மிரட்டலாக பந்துவீசி வரும் இடது கை ஸ்பின்னரை சேர்க்க கௌதம் கம்பீர் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கம்பீர் தேர்வு செய்திருக்கும் இடது கை ஸ்பின்னர், சௌரப் குமார் தான். மொத்தம் 72 முதல்தர டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, அதில் 312 விக்கெட்களை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
மேலும், 25 முறை 5 விக்கெட்களையும், 5 முறை 10 விக்கெட்களையும் கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறார். அடுத்த, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சீசனில், அஸ்வினுக்கு மாற்றாக சௌரப் குமாரை தான், டெஸ்டில் விளையாட வைக்க கம்பீர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பிசிசிஐ மீட்டிங்கில் பேசிய கம்பீர், ‘‘வாஷிங்டன் சுந்தர், ஐபிஎல் முதற்கொண்டு அனைத்து பார்மெட்டிலும் விளையாடுகிறார். அவருக்கு ஒருமுறை காயம் ஏற்பட்டால், நீண்ட ஓய்வுக்கு சென்றுவிடுகிறார். இதனால், அடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் சீசனில், அஸ்வினுக்கு மாற்றாக சௌரப் குமாருக்கு சில போட்டிகளில் வாய்ப்பு கொடுத்து பார்க்க வேண்டும்.
அதில், சௌரப் குமார் சிறப்பாக செயல்படாத பட்சத்தில், வாஷிங்டன் சுந்தரை டெஸ்டிலும் கொண்டு வரலாம். சௌரப், டெஸ்டில் மட்டுமே விளையாடுவதால், அவரால் டெஸ்டில் புத்துணர்ச்சியுடன் பந்துவீச முடியும். பேட்டிங்கிலும் ஓரளவுக்கு ரன்களை அடிக்க கூடியவர்தான்’’ என கம்பீர் பரிந்துரை செய்திருப்பதாக கூறப்படுகிறது.
வாஷிங்டன் சுந்தர் தற்போது, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் சிறப்பாகதான் செயல்படுகிறார். இறுதி முடிவை, தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர்தான் எடுப்பார். அடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் சீசன், வரும் ஜூனில்தான் துவங்கும் என்பதால், அப்போதுதான் அஸ்வினுக்கு மாற்று யார் என்பது தெரிய வரும் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.