தினேஷ் கார்த்திக் ஓய்வு? ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா? வெளியானது தகவல்!

2004ஆம் ஆண்டிலேயே இந்திய அணிக்கு தினேஷ் கார்த்திக் அறிமுகமானார். இவருக்கு தொடர்ந்து அணியில் இடம் கிடைக்கவில்லை.

தினேஷ் கார்த்திக் ஓய்வு? ஐபிஎல் தொடரில் விளையாடுவாரா? வெளியானது தகவல்!

2004ஆம் ஆண்டிலேயே இந்திய அணிக்கு தினேஷ் கார்த்திக் அறிமுகமானார். இவருக்கு தொடர்ந்து அணியில் இடம் கிடைக்கவில்லை.

தோனி வந்த பிறகு தினேஷ் கார்த்திக்கின் இடம் மொத்தமாக பறிபோனது. 2007ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரில் கோப்பை வென்ற அணியில் தினேஷ் கார்த்திக் இடம்பெற்ற நிலையில், ஓரங்கட்டப்பட்டார். 

உலகில் எந்த பீல்டரும் செய்யாத சாதனை: வரலாறு படைத்த ரோஹித் சர்மா!

குடும்ப பிரச்சினைகள் காரணமாக, சில ஆண்டுகள் கிரிக்கெட்டில் இருந்து விலகியிருந்த அவர், இரண்டாவது திருமணம் முடித்தப் பிறகு, கிரிக்கெட்டில் மீண்டும் பழைய பார்முக்கு திரும்ப ஆரம்பித்தார்.

டெல்லி, மும்பை, பெங்களூர் அணிகளுக்காக விளையாடி, பிறகு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாகவும் செயல்பட்டார். இதனால், 2019ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு கிடைத்தது.

பார்ம் அவுட் ஆனப் பிறகு, தொடர்ந்து கிரிக்கெட் வர்ணனை பணியையும் அவர் செய்து வந்ததால், விரைவில் ஓய்வினை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. 2021ஆம் ஆண்டில், அப்போது பேட்டிகொடுத்த தினேஷ் கார்த்திக், சவால் ஒன்றை விடுத்திருந்தார்.

தினேஷ் கொடுத்த பேட்டியில், ‘‘நான் ஐபிஎலில் சிறப்பாக விளையாடி மீண்டும் இந்திய அணிக்கு நிச்சயம் திரும்புவேன். 2022ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடர்தான் எனது இலக்கு’’ எனக் கூறினார். 

தினேஷ் கார்த்திக் சொன்னது போல ஐபிஎல் 15ஆவது சீசனில் ஆர்சிபி அணிக்காக பெஸ்ட் பினிஷராக செயல்பட்டு, டி20 உலகக் கோப்பை அணியிலும் இடம் பிடித்து அசத்தினார். 

இனி இந்திய அணியில் இளம் வீரர்களுக்குத்தான் அதிக வாய்ப்புகள் கொடுக்கப்படும் என்பதால், தினேஷ் கார்த்திக்கிற்கு இடம் கிடைப்பது மிகமிக கடினம்தான்.

டி20 உலகக் கோப்பை 2022 தொடர் முடிந்தப் பிறகு தினேஷ் கார்த்திக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. இருப்பினும், அவர் ஓய்வு அறிவிக்கவே இல்லை. 

இதன்மூலம், ஐபிஎல் 17ஆவது சீசனில் சிறப்பாக செயல்பட்டால், டி20 உலகக் கோப்பை 2024 அணியில் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர் இருப்பார் எனத் தெரிகிறது.

இந்நிலையில், 17ஆவது சீசன் முடிந்த உடனே ஐபிஎலில் இருந்து தினேஷ் கார்த்திக் ஓய்வு பெற உள்ளதாகவும், டி20 உலகக் கோப்பை 2024 அணியில் இடம் கிடைக்கவில்லை என்றால், இந்திய அணியில் இருந்தும் ஓய்வுபெற உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp