நாய் கூட மதிக்கவில்லை... உண்மையாவே மைதானத்தில் நடந்த சம்பவம்...
நடப்பு ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி தங்களுடைய முதல் லீக் ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையில் களமிறங்கியது.
ஒரு நாய் கூட நம்மல மதிக்க மாட்டேங்குது என்று நம்மில் பலர் நிச்சயம் புலம்பி இருப்போம். இந்த நிலையில், அந்த சம்பவம் ஹர்திக் பாண்டியா வாழ்க்கையில் நேற்று நடந்து விட்டது.
நடப்பு ஐபிஎல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணி தங்களுடைய முதல் லீக் ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையில் களமிறங்கியது.
ஹர்திக் பாண்டியா தன் சொந்த ஊர் குஜராத் அணியின் கேப்டனாக இருந்த நிலையில் திடீரென்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கேப்டனாக மாறிவிட்டார்.
இதனால் குஜராத் அணிக்கு துரோகம் செய்துவிட்டதாக ஹர்திக் பாண்டியாவை அகமதாபாத் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
நேற்றைய ஆட்டத்தில் கேப்டனான ஹர்திக் பாண்டியாவின் சில அறிவுரைகளை பும்ரா உள்ளிட்டோ மதிக்கவில்லை. இதனால் கடுப்பில் இருந்த ஹர்திக் பாண்டியா, 15வது ஓவர் வீசி கொண்டு இருந்தபோது திடீரென்று மைதானத்திற்குள் ஒரு நாய் உள்ளே புகுந்தது.
அந்த இடத்துல தான் நாங்க தோற்று போனோம்... ஹர்திக் பாண்டியா வெளியிட்ட காரணம்!
அந்த நாய் விரட்ட பலரும் முயற்சித்த போது ஹர்திக் பாண்டியா அந்த நாயை சூச்சூ என்று அழைத்து கொஞ்சினார். ஆனால் அந்த நாய், ஹர்திக் பாண்டியாவை மதிக்காமல் அப்படியே ஓடி சென்று விட்டது.
இதனால் ஏமாற்றம் அடைந்து தன்னுடைய இடுப்பில் கை வைத்துக் கொண்ட ஹர்திக் பாண்டியாவை பார்த்த ரசிகர்கள் அவரை கேலி செய்து வருகின்றனர்.