சிஎஸ்கே பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றம்.. தோனியின் மாஸ்டர் பிளான்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளேயிங் லெவனில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகவும், இரண்டு புதிய வீரர்களுக்கு பேட்டிங் வரிசையில் இடம் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளேயிங் லெவனில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகவும், இரண்டு புதிய வீரர்களுக்கு பேட்டிங் வரிசையில் இடம் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஐபிஎல் தொடரிலிருந்து சிஎஸ்கே அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முழங்கை காயம் காரணமாக விலகிய நிலையில், 17 வயதான மும்பையைச் சேர்ந்த இளம் பேட்ஸ்மேன் ஆயுஷ் மத்ரே அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
ரஞ்சி டிராபி மற்றும் லிஸ்ட் ஏ ஒருநாள் போட்டிகளில் ஆயுஷ் மத்ரே ரன் குவித்திருந்தாலும், இதுவரை டி20 போட்டிகளில் விளையாடியது இல்லை. என்றாலும் அவரை வலைப் பயிற்சிக்கு அழைத்து சோதித்ததில் அதில் அவர் சிறப்பாக பேட்டிங் செய்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால், அவருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை, சிஎஸ்கே அணியில் குர்ஜப்நீத் சிங் காயம் காரணமாக விலகியதால், அவருக்குப் பதிலாக 'பேபி ஏபி' என அழைக்கப்படும் தென்னாப்பிரிக்க அதிரடி பேட்ஸ்மேன் டெவால்ட் பிரெவிஸ் அணியில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மிடில் ஆர்டர் சற்றே பலவீனமாகக் காணப்படும் நிலையில், பிரெவிஸ் அதிரடியாக ஆடக் கூடியவர் என்பதால், சிஎஸ்கே அணி நிர்வாகம் அவரை அவசரமாகத் தேர்வு செய்துள்ளது.
அத்துடன், சிவம் துபே அதிரடியாக ஆடக்கூடியவர் என்றாலும், 2025 ஐபிஎல் தொடரில் இதுவரை அவர் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. எனவே, மிடில் ஆர்டரின் அதிரடித் திறனை அதிகரிக்கும் நோக்கிலேயே டெவால்ட் பிரெவிஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், ஆயுஷ் மத்ரே மற்றும் டெவால்ட் பிரெவிஸ் ஆகிய இருவரும் பிளேயிங் லெவனில் இடம்பெற அதிக வாய்ப்புகள் உள்ளது.
இவர்கள் இருவரையும் அணியில் இணைத்தால், தற்போதுள்ள வீரர்களில் இருவரை நீக்க வேண்டியிருக்கும். அந்த இரண்டு வீரர்கள் ராகுல் திரிபாதி மற்றும் விஜய் சங்கர் ஆக இருக்கலாம் எனக் கூறப்படுகின்றது. இருவரும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் முடிவில் பேசிய தோனி, அணியின் பந்துவீச்சு சிறப்பாக இருப்பதாகக் குறிப்பிட்ட நிலையில், பந்துவீச்சாளர்களை மாற்றுவதற்கான வாய்ப்பு குறைவு.
சிஎஸ்கே உத்தேச அணி
- ஷேக் ரஷீத்
- ரச்சின் ரவீந்திரா
- ஆயுஷ் மத்ரே
- சிவம் துபே
- டெவால்ட் பிரெவிஸ்
- ரவீந்திர ஜடேஜா
- எம்.எஸ். தோனி
- ஜேமி ஓவர்டன்
- அன்ஷுல் கம்போஜ்
- நூர் அகமது
- கலீல் அகமது
- மதீஷா பதிரானா