மின் கட்டணம் இன்று முதல் மீண்டும் அதிகரிப்பு
மின்சார கட்டணத்தை இன்று (20) முதல் 18% அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின்சார கட்டணத்தை இன்று (20) முதல் 18% அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
மின்சாரக் கட்டணத்தைப் பயன்படுத்தும் அலகுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டணம் எவ்வாறு அதிகரிக்கப்படும் என்பதை இன்று (20) பிற்பகல் வேளையில் அறிவிக்கவுள்ளதாக அதன் தலைவர் கூறியுள்ளார்.
இதேவேளை, ஓராண்டில் மூன்றாவது முறையாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.