இந்திய அணிக்கு மிகப்பெரிய ஆபத்து... இது நடந்தால் இங்கிலாந்துக்கு தான் வெற்றி... இப்படி ஒரு திருப்பமா?

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 246 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இந்திய அணி தங்களுடைய முதல் இன்னிங்சில் 436 ரன்கள் குவித்தது.

இந்திய அணிக்கு மிகப்பெரிய ஆபத்து... இது நடந்தால் இங்கிலாந்துக்கு தான் வெற்றி... இப்படி ஒரு திருப்பமா?

இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் டெஸ்ட் போட்டி ஹைதராபாத் நகரில் கடந்த 25ஆம் தேதி தொடங்கி நடந்து வருகின்றது.

டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 246 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இந்திய அணி தங்களுடைய முதல் இன்னிங்சில் 436 ரன்கள் குவித்தது.

இங்கிலாந்து அணி தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸில் 190 ரன்கள் பின்தங்கிய நிலையில் களம் இறங்கி அபாரமாக விளையாடி ரன்களை சேர்த்து வருகிறது.

முதல் இன்னிங்சில் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்த ஆலி போப், இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாக விளையாடி இந்தியாவுக்கு தலைவலியை ஏற்படுத்தி உள்ளார்.

ஆலி போப் கடைசி வரை நின்று 208 பந்துகளை பிடித்து 148 ரன்கள் எடுத்து களத்தில் இருக்கிறார். இன்னும் இங்கிலாந்து அணிக்கு நான்கு விக்கெட்டுகள் எஞ்சி இருக்கிறது.

 தலைகீழாக மாறிய ஆட்டம்... இந்தியாவுக்கு கடும் சிக்கல்.. மிரள வைத்த இங்கிலாந்து வீரர்!

இந்திய அணியை விட 126 ரன்கள் கூடுதலாக வைத்துள்ள இங்கிலாந்து அணி 50 முதல் 100 ரன்கள் கூடுதலாக அடித்தால் அது நிச்சயம் இந்தியாவுக்கு சவாலை கொடுக்கும் என்று கூறப்படுகின்றது.

சுழற் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் கடைசி இன்னிங்ஸ் பேட்டிங் செய்வது கடினமாகும் என்பதால், 150 ரன்கள் மேல் இலக்கு சென்றாலே அது பேட்டிங் செய்யும் அணிக்கு ஆபத்தை கொடுக்கும். 

இந்திய அணியில் ரோகித் சர்மா, கில் போன்ற வீரர்கள் ஃபார்மில் இல்லாததால் இங்கிலாந்து நிர்ணயிக்கும் இலக்கை இந்தியா எட்டுமா என்று சந்தேகம் காணபடுகின்றது. பொறுத்திருந்து பார்க்கலாம்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp