அபுதாபியில் இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்து போட்ட மாஸ்டர் பிளான்.. என்ன தெரியுமா?
உலகில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதற்கு மிகவும் கடினமான நாடுகளில் இந்தியா முதல் இடத்தில் இருக்கிறது.
இந்திய அணிக்கு எதிராக இந்தியாவில் வைத்து ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து விளையாட இருக்கிறது.
இந்தத் தொடர் ஜனவரி 25ஆம் தேதி முதல் துவங்கி நடக்க இருக்கிறது. மேலும் மார்ச் மாதம் இறுதியில் முடிவடைய இருக்கிறது.
உலகில் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடுவதற்கு மிகவும் கடினமான நாடுகளில் இந்தியா முதல் இடத்தில் இருக்கிறது.
இந்தியா வெளிநாடுகளில் டெஸ்ட் தொடரை கைப்பற்ற முடியும். ஆனால் இந்தியாவில் வெளிநாடுகளில் டெஸ்ட் தொடரை கைப்பற்றுவது என்பது உலகக் கோப்பையை கைப்பற்றுவதற்கு சமமானது.
இந்தியாவில் அமைக்கப்படும் சுழல் பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் இந்தியாவின் பேட்ஸ்மேன்கள் மற்றும் இந்திய சுழல் பந்துவீச்சாளர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்கின்ற தெளிவை கொண்டு இருப்பதுடன், அதற்கான திறமையோடும் இருப்பார்கள்.
ஆனால் வெளிநாடுகளில் இருந்து வரக்கூடியவர்கள் முதலில் இங்கு இருக்கும் தட்பவெப்ப நிலைக்கு பழகுவதே முதலில் சிரமமான ஒன்றாக இருக்கும். இதற்கு அடுத்து அவர்கள் சுழல் பந்துவீச்சுக்கு எதிராக விளையாடவும், அடுத்து திறமையாக சுழல் பந்து வீசவும் செய்ய வேண்டும்.
இதன் காரணமாக இந்தியாவிற்கு வரும் வெளிநாட்டு அணிகளால் குறிப்பாக டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட முடியாது. இதன் காரணமாகவே இந்தியாவில் ஒரு டெஸ்ட் தொடரை வெல்வது உலகக் கோப்பை தொடரை வெல்வதற்கு சமமான அந்தஸ்துடன் பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இங்கிலாந்து அணி இந்திய அணியை இந்தியாவில் வைத்து எதிர்கொள்ள, இந்த முறை புதுமையான வித்தியாசமான ஒரு திட்டத்தை தீட்டி இருக்கிறது.
அது என்னவென்றால் முன்கூட்டியே இந்தியத் தொடருக்கு தயாராகும் விதமாக புறப்படும் இங்கிலாந்து அணி முதலில் அபுதாபி செல்கிறது.
அபுதாபியில் மொத்தம்நான்கு தரமான மைதானங்களில், 65 ஆடுகளங்களும், 22 வலை பயிற்சி செய்யும் இடங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இங்கு இந்தியாவில் எப்படி தட்பவெப்பம் இருக்குமோ அப்படியே இருக்கும்.
மேலும் அமைக்கப்படும் ஆடுகளங்கள் அனைத்தும் இந்தியாவில் தயாரிக்கப்படும் ஆடுகளங்கள் போலவே இருக்கும்.
மொத்தம் ஒன்பது நாட்கள் இந்திய சூழ்நிலையையும், ஆடுகளத்தின் தன்மையையும் ஒத்த இங்கிலாந்து அணி பயிற்சி செய்ய முடிவு எடுத்திருக்கிறது. ஆனாலும் கூட இங்கிலாந்து மூத்த வீரர்களுக்கு இந்த திட்டத்தில் பெரிய உடன்பாடு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது!