சி.எஸ்.கேவுக்கு எதிரான முதல் போட்டியிலேயே நாங்க தோற்க காரணம் இதுதான்  – வருத்தத்தில் டுபிளசிஸ்

நடப்பு 2024-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதலாவது லீக் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

சி.எஸ்.கேவுக்கு எதிரான முதல் போட்டியிலேயே நாங்க தோற்க காரணம் இதுதான்  – வருத்தத்தில் டுபிளசிஸ்

நடப்பு 2024-ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் முதலாவது லீக் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது.

இதன் மூலம் நடப்பு சாம்பியன் ஆன சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டனாக களமிறங்கிய ருதுராஜ் முதல் போட்டிகளில் வெற்றியை பெற்றிருக்கிறார்.

16 வருடமாக சேப்பாக்கத்தில் தோற்கும் ஆர்சிபி.. கேப்டனான முதல் போட்டியில் ருதுராஜ்க்கு வெற்றி!

இந்த நிலையில், பெங்களூரு அணியின் தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள கேப்டன் டுப்ளசிஸ் 20 ரன்கள் குறைவாக அடித்தாக கூறியுள்ளார். 

பவர் பிளேவில் ரன்களை சேர்க்க வேண்டும். எனினும், நாங்கள் முதல் ஆறு ஓவரில் அதிக விக்கெட் இழந்து விட்டோம். நாங்கள் முதல் 10 ஓவர்களில் சரியாக விளையாடவில்லை. 

சென்னை எங்களை விட போட்டியில் அனைத்து கட்டத்திலும் முன்னேறி சென்றார்கள். சிஎஸ்கே வீரர் சிவம் துபே ஷார்ட் பால்களை எதிர்கொள்ள கொஞ்சம் தடுமாறினார். 

சென்னை ஆடுகளத்தில் முதலில் பேட்டிங் செய்த அணிகள் அதிக வெற்றியை பெற்று இருக்கிறது. ஆடுகளமும் கொஞ்சம் காய்ந்த நிலையில் இருந்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்ததில் எந்த தவறும் இல்லை.

தினேஷ் கார்த்திக் கடந்த ஒரு ஆண்டாக எந்த கிரிக்கெட்டும் விளையாடவில்லை என நினைக்கிறேன். ஆனால் அவர் இன்றைய ஆட்டத்தில் முக்கிய இன்னிங்ஸ் ஒன்றை ஆடி உள்ளார்.  அனுஜ் ரவத்தும் தன்னுடைய திறமையை நிரூபித்து உள்ளார். என்று கூறினார்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp