பதவி மற்றும் புகழ் வந்தவுடன் விராட் கோலி மாறிவிட்டார்; அவரும் ரோஹித் சர்மாவும் ஒன்று அல்ல: பிரபல வீரர் குற்றச்சாட்டு!

யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவுக்கு இடையேயான வித்தியாசத்தை பற்றி அமித் மிஸ்ராவிடம் கேட்கப்பட்டது. 

பதவி மற்றும் புகழ் வந்தவுடன் விராட் கோலி மாறிவிட்டார்; அவரும் ரோஹித் சர்மாவும் ஒன்று அல்ல: பிரபல வீரர் குற்றச்சாட்டு!

பதவி மற்றும் புகழ் வந்தவுடன் விராட் கோலி மாறிவிட்டதாகவும் ஆனால், ரோஹித் சர்மா எப்போதும் ஒரே மாதிரியாகவே இருப்பார் என சுழற் பந்துவீச்சாளர் அமித் மிஸ்ரா தெரவித்த கருத்து வைரலாகி வருகின்றது.

யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மாவுக்கு இடையேயான வித்தியாசத்தை பற்றி அமித் மிஸ்ராவிடம் கேட்கப்பட்டது. 

அதற்கு பதில் அளித்த அவர், "விராட் கோலியை ஒரு கிரிக்கெட் வீரராக நான் அதிகம் மதிக்கிறேன். ஆனால், விராட் கோலிக்கு குறைவான நண்பர்கள் மட்டுமே உள்ளனர். ஏனெனில், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் இயல்பு வெவ்வேறானது.

ரோஹித் சர்மாவை நான் முதல் நாள் பார்த்தபோது அவர் எப்படி நடந்து கொண்டாரோ. இன்று நான் பார்க்கும் போதும் அவர் அதே நபராகவே நடந்து கொள்கிறார். 

நான் இந்திய அணியில் பல ஆண்டுகளாக விளையாடவில்லை. ஆனால், நான் இப்போது ரோஹித் சர்மாவை ஐபிஎல்-இல் பார்த்தாலும் அல்லது வேறு எந்த நிகழ்ச்சியில் பார்த்தாலும் அவர் என்னுடன் நகைச்சுவையாக பேசுவார். 

நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து கொள்வோம். அவர் இப்போது உச்சத்தில் இருக்கிறார். ஆனால், நாங்கள் இப்போதும் அதே முறையில் தான் பழகுகிறோம்.

ஆனால், விராட் கோலி நிறைய மாறிவிட்டார். நான் அவருடன் பேசுவதையும் நிறுத்தி விட்டேன். எனக்கு 14 வயதில் இருந்து விராட் கோலியை தெரியும்.  நாங்கள் ஒன்றாக சமோசா சாப்பிட்டு இருக்கிறோம். அவர் பலமுறை இரவு நேரத்தில் பிட்சா கேட்பார்.  ஆனால், எனக்குத் தெரிந்த கோலிக்கும், கேப்டன் விராட் கோலிக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது." என்று கூறியுள்ளார்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp