140 கிலோமீற்றர் வேகத்தில் தலையை தாக்கிய பந்து.. அடுத்து கையில்... வலியால் துடித்த இந்திய வீரர்... பரபரப்பு சம்பவம்!

முதல் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி வேகப்பந்துவீச்சிற்கு சாதகமான ஆடுகளத்தில் பந்துவீச்சை தேர்வு செய்தது. 

140 கிலோமீற்றர் வேகத்தில் தலையை தாக்கிய பந்து.. அடுத்து கையில்... வலியால் துடித்த இந்திய வீரர்... பரபரப்பு சம்பவம்!

தென்னாப்பிரிக்கா மற்றும் இந்திய அணிகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. அப்போது பேட்டிங் செய்து கொண்டிருந்த ஷர்துல் தாக்கூர் தலையில் பந்து தாக்கியது.

இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி வேகப்பந்துவீச்சிற்கு சாதகமான ஆடுகளத்தில் பந்துவீச்சை தேர்வு செய்தது. 

இதை அடுத்து களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் தடுமாறி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். ரோகித் சர்மா ஐந்து ரன்களிலும், கில் இரண்டு ரன்களிலும், ஜெய்ஸ்வால் 17 ரன்களிலும் ஆட்டம் இழக்க இந்திய அணியை காப்பாற்ற கடுமையாக விராட் கோலியும் ஸ்ரேயாஸ் ஐயரும் முயற்சி செய்தனர். 

விராட் கோலி 38 ரன்களிலும், ஸ்ரேயாஸ் 31 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க கே எல் ராகுல் மற்றும் ஷாதுல் தாக்கூர் ஜோடி சேர்ந்ததது. அப்போது ஆட்டத்தின் 44 வது ஓவரில் தென்னாப்பிரிக்க வீரர் ஜெரால்ட் கோயிட்சே வீசிய பந்து எதிர்பாராத விதமாக ஷர்துல் தாக்கூரின் தலையில் பட்டது. 

ஷர்துல் ஹெல்மெட் போட்டு இருந்தும் அவருக்கு வலி ஏற்பட்டது. இதனால் மருத்துவர்கள் உடனடியாக வந்து சர்துல் தாக்கூருக்கு சிகிச்சை அளித்தனர். 

பந்து தலையில் பட்டாலே மருத்துவர்கள் சோதிக்க வேண்டும் என்பது விதி. அதன் படி மருத்துவர்கள் ஷர்துல் தாக்கூரை சோதித்த போது அவருடைய நெற்றியில் வீக்கம் இருந்தது தெரியவந்தது. இதனால் மருத்துவ குழுவினர் கொஞ்சம் பதற்றம் அடைந்தனர். 

எனினும் சர்துல் தாக்கூர் சுயநினைவோடு இருந்ததால் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை. இதனை அடுத்து நெற்றியில் ஐஸ் கட்டி ஒத்தடம் கொடுத்தனர். இதை அடுத்து சர்துல் தாக்கூர் மீண்டும் பேட்டிங் செய்ய முடிவெடுத்தார். 

அப்போது 47வது ஓவரில் ரபாடா வீசிய பந்து சர்துல் தாக்கூரின் கையில் பட்டது. அப்போதும் அவர் வலியால் துடித்தார். இதை அடுத்து அடுத்த பந்திலே ஷர்துல் தாக்கூர் 24 ரன்களில் ஆட்டம் இழந்தார்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp