மாணிக்கக் கற்களை சீனாவுக்கு கடத்த முயன்ற தந்தை - மகள் கைது
சந்தேக நபரான 45 வயது தந்தையும் அவரது 21 வயது மகளும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுற்றித் திரிந்து வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் மாணிக்கக்கற்களை சீனாவுக்கு கொண்டு செல்ல முயன்ற இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் புறப்பாடு முனையத்தில் சுங்க அதிகாரிகளால், நேற்றைய தினம் சீன பிரஜைகளான தந்தையும் மகளும் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபரான 45 வயது தந்தையும் அவரது 21 வயது மகளும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சுற்றித் திரிந்து வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில்,சந்தேக நபர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட மாணிக்கக்கற்களில் சந்திரகாந்தி, கோமேதா, அரனுல், வைரோடி உள்ளிட்டவை அடங்கியுள்ளன.
இந்த மாணிக்கக்கற்களின் பெறுமதி ஒரு கோடியே 74 இலட்சத்து 50 ஆயிரத்து 875 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.