தென்னிலங்கையில் ஐந்து பேர் சுட்டுக்கொலை

இந்த துப்பாக்கிச் சூடு இன்று காலை 7.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தென்னிலங்கையில் ஐந்து பேர் சுட்டுக்கொலை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பெலியத்த நுழைவாயிலுக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், மற்றொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த துப்பாக்கிச் சூடு இன்று காலை 7.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

பிராடோ ரக காரில் வந்தவர்கள் டிஃபென்டர் ஜீப்பில் சென்றவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பாதாள உலகக் குற்றவாளியான கொஸ்கொட சுஜீயின் கும்பலே இந்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp