பிளே ஆப் சுற்றுக்கு இந்த 4 அணிகள் தான் தகுதி பெறும்.. முன்னாள் சிஎஸ்கே வீரர் கணிப்பு
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சதாப் ஜகாத்தி, ஐபிஎல் பிளே ஆப் சுற்றி எந்த அணி தகுதி பெறும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.

ஐபிஎல் தொடரில் மொத்தம் 10 அணிகள் உள்ள நிலையில், பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வேண்டும் என்றால் வெறும் நான்கு அணிகளால் மட்டுமே முடியும்.
இதனால் ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்றுக்கு செல்ல முடியும் என்பதால், எந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்கிறது என்பதை கணிக்க முடியாது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சதாப் ஜகாத்தி, ஐபிஎல் பிளே ஆப் சுற்றி எந்த அணி தகுதி பெறும் என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.
கொல்கத்தா அணி கண்டிப்பாக பிளே ஆப் சுற்றுக்கு சென்று விடும் என்றும், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் அணியும் நல்ல பலமான அணியாக உள்ளதால், கொல்கத்தா, சென்னை குஜராத் ஆகிய அணிகள் முதல் மூன்று இடங்களை பிடித்து விடும் என்றும் கூறியுள்ளார்.
அத்துடன், நான்காவது அணியாக லக்னோ அல்லது டெல்லி இருக்கும் என்றும், டெல்லி அணி இம்முறை நல்ல வீரர்களை தேர்வு செய்கிறார்கள். இதன் காரணமாக டெல்லி அணி நமக்கு இம்முறை ஆச்சரியத்தை கொடுக்கும் என கூறியுள்ளார்.
இந்த சீசனில் பல அணிகள் நல்ல வீரர்களை தேர்வு செய்து இருக்கிறார்கள். இம்முறை டெல்லி அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என நினைப்பதாகவும், கோலி பல ஆண்டுகளாக ஆர்சிபி அணிக்கு விளையாடி வருவதால், அவர் கோப்பையுடன் செல்ல வேண்டும் என ஆசைப்படுவதாக அவர் கூறி உள்ளார்.
இம்முறை விராட் கோலி தான் ஆரஞ்சு தொப்பியை வெல்வார் என்றும், இல்லையென்றால் ரோகித் சர்மா வெல்ல வாய்ப்பு உள்ளதுடன், குல்தீப் யாதவ் அல்லது சாகல் போன்றவருக்கு அந்த வாய்ப்பு கிடைக்கும் என்று அவர் கூறியுள்ளார்.