ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகள் முறியடித்த சுப்மன் கில்! தரமான சம்பவம்!
தனது 50ஆவது ஒருநாள் போட்டியில் விளையாடிய கில், 102 பந்துகளில் 112 ரன்கள் குவித்ததுடன், ஒருநாள் போட்டிகளில் தனது ஏழாவது சதத்தை பெற்றார்.

இங்கிலாந்து அணிக்கு எதிராக அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில், நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியாவின் துணை கேப்டன் சுப்மன் கில் அபாரமான சதம் அடித்து அசத்தினார்.
தனது 50ஆவது ஒருநாள் போட்டியில் விளையாடிய கில், 102 பந்துகளில் 112 ரன்கள் குவித்ததுடன், ஒருநாள் போட்டிகளில் தனது ஏழாவது சதத்தை பெற்றார்.
இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் கில்லை சமாளிக்க முடியாமல் திணறிய நிலையில், 95 பந்துகளில் தனது சதத்தை எட்டிய கில், இந்த சதத்தின் மூலம் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார்.
அதிவேகமாக 2500 ரன்கள் கடந்த வீரர்
சுப்மன் கில் ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 2500 ரன்கள் எட்டிய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளதுடன், 54 இன்னிங்ஸில் இந்த இலக்கை பூர்த்தி செய்து தென்னாப்பிரிக்கா வீரர் ஹாஷிம் ஆம்லாவின் (57 இன்னிங்ஸ்) சாதனையை முறியடித்துள்ளார்.
50ஆவது போட்டியில் அரைசதம்
இதுவரை இந்தியாவுக்காக விளையாடிய எந்த வீரரும் 50ஆவது போட்டியில் சதமடித்தது இல்லை என்ற நிலையில், 50ஆவது ஒருநாள் போட்டியில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை கில் பெற்றுள்ளார்.
ஒரே மைதானத்தில் 3 வடிவங்களிலும் சதமடித்த வீரர்
இதேவேளை, மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் நரேந்திர மோடி மைதானத்தில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை கில் பெற்றதுடன், உலக அளவில் 4 வீரர்கள் மட்டும் தான் ஒரே மைதானத்தில் அனைத்து வடிவிலான போட்டிகளிலும் சதமடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறைந்த இன்னிங்சில் 7 சதங்கள்
அத்துடன். குறைந்த இன்னிங்ஸில் ஏழு ஒருநாள் சதங்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை கில் பெற்றதுடன், ஷிகர் தவான் (54 இன்னிங்ஸ்) மற்றும் விராட் கோலி (63 இன்னிங்ஸ்) ஆகியோரின் சாதனைகளை முறியடித்துள்ளார்.