இலங்கை தொடரில் விளையாடும் ரோஹித், கோலி: கம்பீர் விடுத்துள்ள கோரிக்கை; அதிரடி டுவிஸ்ட்!

இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இலங்கை தொடரில் விளையாடும் ரோஹித், கோலி: கம்பீர் விடுத்துள்ள கோரிக்கை; அதிரடி டுவிஸ்ட்!

இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரோஹித், விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் , மேற்கிந்திய தீவுகளில் 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு குறுகிய வடிவ கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.

இதனையடுத்து, உலகக் கோப்பைக்குப் பிறகு, ஜிம்பாப்வேக்கு ஐந்து போட்டிகள் கொண்ட டி 20 ஐ தொடருக்கு இளம் அணி அனுப்பப்பட்டதால், இந்திய அணியின் பல முக்கிய உறுப்பினர்கள் விலகி இருந்தனர்.

பின்னர், இலங்கை சுற்றுப்பயணத்தில்மூத்த வீரர்கள் தங்களது  ஓய்வை மேலும் நீட்டிப்பதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், இலங்கை அணியுடனான ஒருநாள் சர்வதேசப் போட்டிகளுக்கு மூத்த வீரர்கள் இருக்க வேண்டும் என்று கம்பீர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மீண்டும் பழைய பஞ்சாயத்து.. ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக ரோகித்.. ஏற்பட்டுள்ள சிக்கல்!

இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி, புதிய தலைமை பயிற்சியாளர் கெளதம் கம்பீர் விடுத்த, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டிகளில் விளையாட வேண்டும் என்ற கோரிக்கைக்கு மூத்த வீரர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர், ஏனெனில் இது பயிற்சியாளராக அவரது முதல் தொடராகும். 

மேலும், ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்பதுடன், ஒருநாள் அணியில் இடம்பெறமாட்டார். 

டி20 தொடரில் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்க மூத்த தேர்வுக் குழு முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மறுபுறம், ரிஷப் பந்த் இரண்டு இந்திய அணிகளிலும் ஒரு பகுதியாக இருப்பார்.

மேலும், ஆல்-ரவுண்டர்களான ரியான் பராக் மற்றும் ஷிவம் ஆகியோர் ODI மற்றும் T20I க்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்றும்,யஷஸ்வி ஜெய்ஸ்வால் T20I இன் ஒரு பகுதியாக மட்டுமே இருப்பார் என்றும் கூறப்படுகின்றது.

இதேபோல், மும்பை அணியின் பேட்டர்கள் சூர்யகுமார் யாதவ் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் முறையே டி20 மற்றும் ஒருநாள் அணியில் மட்டுமே இடம் பெறுவார்கள் என தெரிவிக்கப்படடுள்ளது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp