நீதிமன்ற வளாகத்திற்குள் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக்கொலை
சட்டத்தரணி போல் வேடமணிந்த நபரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

புதுக்கடை நீதிமன்ற வளாகத்துக்குள் இன்று முற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் கணேமுல்ல சஞ்சீவ உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுமான “கணேமுல்ல சஞ்சீவ” இன்று (19) காலை பூசா சிறைச்சாலையில் இருந்து வழக்கு ஒன்றுக்காக அழைத்துவரப்பட்டுள்ளார்.
குறித்த சந்தர்ப்பத்திலேயே துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாகவும் சட்டத்தரணி போல் வேடமணிந்த நபரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.