தொடக்க வீரர் யார்? ராகுலுக்கு வழங்கப்படவுள்ள புதிய பொறுப்பு.. இளம் வீரருக்கு இடமில்லை? கம்பீர் மாஸ்டர் பிளான்

முதல் டெஸ்ட் போட்டியின் ரோஹித் விளையாடவில்லை என்றால் இந்த இரண்டு வீரர்களில் ஏதேனும் ஒருவர் தொடக்க வீரராக களமிறங்குவார்கள்.

தொடக்க வீரர் யார்? ராகுலுக்கு வழங்கப்படவுள்ள புதிய பொறுப்பு.. இளம் வீரருக்கு இடமில்லை? கம்பீர் மாஸ்டர் பிளான்

5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட  டெஸ்ட் தொடரில் விளையாட ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியின் ஒரு குழு ஏற்கெனவே ஆஸ்திரேலியாவு சென்றுள்ளதுடன், மற்றொரு குழு பயிற்சியாளர் கம்பீர் தலைமையில் இன்று ஆஸ்திரேலியா புறப்பட்டது. 

அதற்கு முன்னதாக, மும்பையில் கௌதம் கம்பீர் ஊடகங்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு பதில் அளித்ததுடன், முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா பங்கேற்பது குறித்து இன்னும் தெளிவான அறிவிப்பு வரவில்லை என்றார்.

அத்துடன், ரோகித் சர்மாவுக்கு பதில் தொடக்க வீரராக யார் களமிறங்க போகிறார் என்று கேள்விக்கு கம்பீர் பதில் அளிக்கையில்,

“தொடக்க வீரர் இடத்திற்கு பல வீரர்கள் இருக்கிறார்கள். அபிமன்யு ஈஸ்வரன் மற்றும் கே எல் ராகுல் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள், முதல் டெஸ்ட் போட்டியின் ரோஹித் விளையாடவில்லை என்றால் இந்த இரண்டு வீரர்களில் ஏதேனும் ஒருவர் தொடக்க வீரராக களமிறங்குவார்கள்.

டாப் ஆர்டர் எந்த இடத்தில் வேண்டுமானாலும் கேஎல் ராகுலால் பேட்டிங் செய்ய முடியும். மூன்றாவது வீரராகவும் இருந்தாலும், ஆறாவது வீரராக இருந்தாலும் ராகுல் பேட்டிங் செய்வார்.

ராகுல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விக்கெட் கீப்பராக கூட செயல்பட்டு இருக்கிறார். தேவைப்பட்டால் ராகுல் நிச்சயம் அந்த பணியை செய்யக்கூடிய வீரராக இருக்கின்றார் என்றார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்திய ஏ அணியில் தொடக்க வீரராக களம் இறங்கிய அபிமன்யு ஈஸ்வரன் 7,12,0,17 ஆகிய ரன்கள் தான் அடித்தார். அத்துடன்,  இரண்டு இன்னிங்ஸிலும் ராகுல் 4,10 ஆகிய ரன்கள் தான் அடித்து இருந்தார். 

இதனால் ராகுல் தொடக்க வீரராகவும் சப்ராஸ்கான் அல்லது துருவ் ஜூரல் நடுவரிசை வீரராகவும் களமிறங்க வாய்ப்பு உள்ளதாக பார்க்கப்படுகின்றது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp