மறைமுகமாக கோலியை விமர்சித்த கம்பீர்! இளம் வீரர்களுக்கு வழங்கிய அறிவுரை
மும்பையில் செய்தியாளரிடம் பேசிய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர், இந்திய அணியின் இளம் வீரர்கள் தனிப்பட்ட ரெக்கார்ட்ஸ்க்காக விளையாட கூடாது என தெரிவித்துள்ளார்.
மும்பையில் செய்தியாளரிடம் பேசிய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர், இந்திய அணியின் இளம் வீரர்கள் தனிப்பட்ட ரெக்கார்ட்ஸ்க்காக விளையாட கூடாது என தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்திய அணியில் எதிர்காலத்திற்கு தேவையான இளம் வீரர்கள் தற்போது கிடைத்துவிட்டதாக கூறிய அவர், வாஷிங்டன் சுந்தரை, நியூசிலாந்து எதிரான தொடருக்கு சேர்த்தபோது பலரும் விமர்சித்தார்கள். ஆனால் அவர் நியூசிலாந்துக்கு எதிராக சிறப்பாக விளையாடி உள்ளார்.
துருவ் ஜூரலும் தற்போது பிரமாதமாக விளையாடி வருவதுடன், இந்தியாவின் அடுத்த தலைமுறை வீரர்கள் சிறப்பாக விளையாடுவதை பார்க்கும் போது மகிழ்ச்சி அளிக்கிறது. நிதிஷ் குமார் எதிர்கால வீரராக விளங்குகிறார்.
எப்போதுமே இளம் வீரர்களுக்கு நான் கூறுவது, இந்திய அணியை நினைத்து விளையாடுங்கள். அணிதான் முதலில் முக்கியம். மற்றவை எல்லாம் பிறகு தான். உங்களுடைய தனிப்பட்ட சாதனைகளை விட இந்திய அணி முக்கியம் என்பதை நினையுங்கள்.
கிரிக்கெட் என்பது ஒரு அணியாக விளையாடக்கூடிய போட்டியாகும்.இந்த கருத்தை நான் திரும்பத் திரும்ப இளம் வீரர்களிடம் சொல்லி வருகின்றேன். இது போன்ற சின்ன சின்ன உரையாடல்கள் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.
சில சமயம் நாம் மற்றவர்களுக்கு போர் அடிக்க வேண்டும்.ஆனால் சொல்ல வேண்டிய விஷயத்தை திரும்ப வலியுறுத்துவது முக்கியம். அணிதான் முக்கியம் என்று நினைத்து நீங்கள் விளையாட தொடங்கி விட்டால் மற்றவைகள் எல்லாம் பின்னால்தான் என்பதை நீங்கள் உணர்வீர்கள் என்று கம்பீர் தெரிவித்துள்ளார்.