இனி இந்த நட்சத்திர வீரருக்கு இந்திய அணியில் இடமில்லை: கம்பீர் அதிரடி!

ராணா, மிகச்சிறந்த வீரர். அவருக்கு போதுமான வாய்ப்புகளை இப்போது இருந்தே கொடுக்க வேண்டும். அப்போதுதான், எதிர்காலத்தில், தரமான வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக வளர்ந்து வருவார். 

இனி இந்த நட்சத்திர வீரருக்கு இந்திய அணியில் இடமில்லை: கம்பீர் அதிரடி!

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய டெஸ்ட் அணி  5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இந்நிலையில், ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு முன், இந்திய அணி தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பேட்டிகொடுத்துள்ளார். 

அப்போது, ‘ஹர்ஷித் ராணா, நிதிஷ் ரெட்டி இருவரையும் சேர்த்தது ஏன்? சீனியர்கள் வீரர்கள் பலர் இருக்கும்போது, புதுமுக வீரர்களை சேர்த்தது சரியான முடிவுதானா?’ என கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த கம்பீர், அணியில் இனி இளம் வீரர்களுக்கு அதிகம் வாய்ப்பு கொடுக்க விரும்புகிறோம். ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் இடம்பெற்றுள்ள அனைத்து வீரர்களும், திறமையானவர்கள் எனக் கூறினார்.

இதனால், இனி ஷர்தூல் தாகூருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை எனக் கருதப்படுகிறது. கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சீசனில், வெளிநாட்டு மண்களில் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக ஷர்தூல் தாகூர் செயல்பட்டார். 

2023-ல் நடைபெற்ற பைனலில் கூட, பிளேயிங் 11 அணியில் இடம்பெற்றிருந்தார். அவரது செயல்பாடு திருப்திகரமாக இல்லாத காரணத்தினால்தான், அவருக்கு மாற்றாக, இனி நிதிஷ் குமார் ரெட்டிக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தொடர்ந்து பேசிய கம்பீர், ராணா, மிகச்சிறந்த வீரர். அவருக்கு போதுமான வாய்ப்புகளை இப்போது இருந்தே கொடுக்க வேண்டும். அப்போதுதான், எதிர்காலத்தில், தரமான வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டராக வளர்ந்து வருவார். 

ஹர்ஷித் ராணாவுக்கு போதுமான அனுபவம் இருக்கிறது. அவரால், பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும். திறமையில்லாதவர்களை நாங்கள் சேர்க்கவில்லை. வாய்ப்பு கிடைத்தால், இருவரும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது எனக் கூறினார்.

இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், ஒரு வெற்றியைக் கூட பெறவில்லை. இதனால், அடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 5 டெஸ்ட் போட்டிகளில், 4 வெற்றிகளை பெற்றாக வேண்டிய கட்டாயத்தில், இந்தியா இருக்கிறது.

இந்த நிலையில், இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட், நவம்பர் 22ஆம் தேதி துவங்க உள்ளது. அடுத்து, டிசம்பர் 6ஆம் தேதி, இரண்டாவது டெஸ்ட், பகலிரவு ஆட்டமாக துவங்கும். 

டிசம்பர் 14, 26 ஆகிய தேதிகளில் 3, 4 ஆகிய டெஸ்ட் போட்டிகள் துவங்கும். ஜனவரி 3ஆம் தேதி, இரு அணிகளுக்கும் இடையில், கடைசி டெஸ்ட் துவங்கி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp