இந்த 4 வீரர்கள் இனி அணிக்கு வேண்டாம்.. பிசிசிஐ சந்திப்பில் கம்பீர் தீர்மானம்?

இந்திய அணியின் பயிற்சியாளரான கவுதம் கம்பீரை மாற்றம் செய்ய வேண்டும் என ஒரு தரப்பினர் தெரிவித்து வந்தனர்.

இந்த 4 வீரர்கள் இனி அணிக்கு வேண்டாம்.. பிசிசிஐ சந்திப்பில் கம்பீர் தீர்மானம்?

இந்தியா – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரை நியூஸிலாந்து அணி 3-0 எனக் கைப்பற்றியதை அடுத்து, சொந்த மண்ணில்   இந்திய அணி டெஸ்ட் தொடரில் வாஷ்-அவுட் செய்யப்பட்டது.

இந்த தோல்விக்குப் பிறகு இந்திய அணியின் பயிற்சியாளரான கவுதம் கம்பீரை மாற்றம் செய்ய வேண்டும் என ஒரு தரப்பினர் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையில், பிசிசிஐ அவசர ஆலோசனை நடத்தியதாகவும், அதன்போத, தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீர் டெஸ்ட் அணியில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் எனவும் இளம் வீரர்களை அணியில் சேர்க்க வேண்டும் எனவும் கூறியதாக பிசிசிஐ தகவல்கள் தெரிவித்துள்ளன.

2025-ம் ஆண்டு டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி முடிந்தவுடன் 2027-ம் ஆண்டுக்கான டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் தொடங்கி விடும் என்பதால், அணியில் மூத்த வீரர்களாக இருக்கும் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் அப்போது டெஸ்ட் போட்டிகள் விளையாடுவார்களா என்பது சந்தேகம் தான் என கம்பீர், பிசிசிஐயிடம் கூறி இருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ரோஹித் உள்ளிட்ட மூன்று வீரர்களை நீக்க முடிவு.. இந்திய அணியில் அதிரடி மாற்றம்

அத்துடன், அவர்களுக்குப் பதிலாக இளம் வீரர்களை அணியின் சேர்ப்பதுடன், ஜடேஜா மற்றும் அஸ்வினுக்கு பதிலாக வாஷிங்க்டன் சுந்தர் மற்றும் அக்சர் பட்டேலும், ரோஹித் மற்றும் கோலிக்குப் பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் அபிமன்யூ ஈஸ்வரன் ஆகியோரை அணியில் சேர்க்க வேண்டும் என என கம்பீர் கூறி இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

இதன்காரணமாக, இந்த வீரர்களை இப்போது முதல் இந்திய அணியில் விளையாட வைத்தால் தான் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் போது தேர்ச்சிப்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp