வாகனங்களை திருப்பி வழங்க முன்னாள் ஜனாதிபதிகளுக்கு சலுகை காலம்
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சருக்கு வழங்கப்படும் சலுகைகள் முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் வழங்கப்படுகின்றன.

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள இரண்டுக்கு மேற்பட்ட அரச வாகனங்களை திருப்பித் தருவதற்கு ஜனாதிபதி செயலகம் சலுகை காலத்தை வழங்கியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு ஜனாதிபதி செயலகத்தால் தலா மூன்று வாகனங்கள் வழங்கப்பட்ட நிலையில், முன்னாள் ஜனாதிபதி ஒருவர் இரண்டு அரச வாகனங்களை மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற தீர்மானத்தை தொடர்ந்து, மேலதிக வாகனத்தை திருப்பித் தருமாறு ஜனாதிபதி செயலகம் மூலம் எழுத்துப்பூர்வ கோரிக்கை விடுத்திருந்தது.
அதன்படி, ஜனாதிபதி செயலகத்தில் வாகனங்களை இதுவரை ஒப்படைக்காதவர்களுக்கு சலுகைக் காலம் வழங்க ஜனாதிபதி செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சருக்கு வழங்கப்படும் சலுகைகள் முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் வழங்கப்படுகின்றன.
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் வழக்கமாக இரண்டு அரச வாகனங்களைப் பயன்படுத்துவதுடன், முன்னாள் ஜனாதிபதிகளுக்கும் அதே முறையில் இரண்டு வாகனங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.