இஷான் கிஷனுக்கு ஆப்பு உறுதியானது... இனி அவ்வளவுதான்... ரோஹித் சர்மா போட்ட மாஸ்ட் பிளான்!
இந்த ஆப்பு வைக்கம் திட்டத்தின் ஒரு பகுதியாகவே துருவ் ஜுரேல் எனும் புதிய விக்கெட் கீப்பரை தேவையின்றி தேர்வுக் குழு. டெஸ்ட் அணியில் சேர்த்து இருக்கிறது.
இந்திய அணியின கேப்டன் ரோஹித் சர்மாவின் முடிவை மதிக்காததால் இளம் வீரர் இஷான் கிஷன் இனி இந்திய அணியில் எளிதில் நுழைய முடியாதபடி சில நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த ஆப்பு வைக்கம் திட்டத்தின் ஒரு பகுதியாகவே துருவ் ஜுரேல் எனும் புதிய விக்கெட் கீப்பரை தேவையின்றி தேர்வுக் குழு. டெஸ்ட் அணியில் சேர்த்து இருக்கிறது.
கடந்த ஓராண்டாக்கு மேலாக இந்திய அணியில் மாற்று வீரராகவே தொடர்ந்து வந்த இஷான் கிஷனுக்கு, மற்ற வீரர்கள் ஓய்வு எடுக்கும் போதும், காயத்தால் வெளியேறும் போதும் மட்டுமே அணியில் இடம் கிடைத்தது.
ஆனால், அவர் ஒரே நேரத்தில் டெஸ்ட் அணி, ஒருநாள் அணி மற்றும் டி20 அணிகளில் இடம் பெற்று வந்தார். அது போன்ற வாய்ப்பு அத்தனை எளிதில் புதிதாக வரும் வீரர்களுக்கு கிடைக்காது.
ஆனால், தன்னை மாற்று வீரராக, தண்ணீர் எடுத்து வரும் "வாட்டர் பாயாக" மட்டுமே இந்திய அணி நிர்வாகம் பயன்படுத்துவாக இஷான் கிஷன் வருத்தத்தில் இருந்ததாக கூறப்பட்டது.
அதன் காரணமாக அவர் தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கு முன்னதாக தான் மனச் சோர்வின் காரணமாக விலகுவதாக அறிவித்ததாகவும் கூறப்படுகிறது.
தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடருக்கு பின் அவர் உள்ளூர் போட்டிகளிலும் ஆடவில்லை. இந்த நிலையில், ஆப்கானிஸ்தான் டி20 தொடரிலும் அவருக்கு அணியில் இடம் அளிக்கப்படவில்லை. இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான அணியிலும் அவர் சேர்க்கப்படவில்லை.
டெஸ்ட் அணியில் தற்போது கே எல் ராகுல், பாரத் மற்றும் துருவ் ஜுரேல் ஆகிய மூன்று விக்கெட் கீப்பர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். மூவரில் ராகுல் மற்றும் பாரத் தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரிலும் அணியில் இடம் பெற்று இருந்தனர்.
ராகுல் ஆற்றும் மற்றும் பாரத் என இரண்டு விக்கெட் கீப்பர்கள் இருக்கும் போது மூன்றாவது விக்கெட் கீப்பருக்கு அவசியமே இல்லை. ஆனால், ரோஹித் சர்மா, இஷான் கிஷனை ஒதுக்கி வைக்கும் நோக்கத்தோடு துருவ் ஜுரேல் என்ற புதிய வீரரை சேர்த்து இருக்கிறார் என கூறப்படுகிறது.