ஐபிஎல் கோப்பை இந்த அணிக்குதான் கிடைக்கும்.... ஜெயிக்கிறது கஷ்டம்... ஹர்பஜன் சிங் ஆருடம்!
ஒரு நல்ல அணிக்கு இருக்க வேண்டிய எல்லாம் இருப்பதால்தான் அவர்கள் டேபிள் டாப்பராக இருக்கிறார்கள்.
நடைபெற்று வரும் 17ஆவது ஐபிஎல் சீசன், அடுத்த வாரத்தில் நிறைவுக்கு வரவுள்ளதுடன், எந்த அணிக்கு ஐபிஎல் கோப்பையை இந்த முறை வெல்லும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்பது குறித்து ஹர்பஜன்சிங் கருத்து வெளியிட்டுள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் எந்த அணி சாம்பியன் ஆகும் என்பது குறித்து பேசிய ஹர்பஜன்சிங் “கொல்கத்தா அணிக்கு நல்ல வாய்ப்புகள் இருக்கிறது. ஏனென்றால் அணி சிறப்பாக இருக்கிறது.
அந்த அணி மிகவும் சமநிலையான ஒரு அணி, குறைகள் என்று எதுவும் கிடையாது. பந்துவீச்சில் சுழல் மற்றும் வேகம் என சிறப்பாக இருக்கிறது. பேட்டிங்கில் தொடக்க இடம், மிடில் வரிசை மற்றும் பினிஷிங் சிறப்பாக இருக்கிறது.
ஒரு நல்ல அணிக்கு இருக்க வேண்டிய எல்லாம் இருப்பதால்தான் அவர்கள் டேபிள் டாப்பராக இருக்கிறார்கள்.
கொல்கத்தா அணியிடம் நிறைய மேட்ச் வின்னர்கள் இருக்கின்ற காரணத்தினால் அவர்களால் கோப்பையை வெல்ல முடியும் என்று நான் நம்புகிறேன்.
அவர்களை வீழ்த்த வேண்டும் என்றால் எதிரணிக்கு ஒரு நல்ல நாள் இருக்க வேண்டும். நடப்பு ஐபிஎல் தொடரில் அவர்களை வீழ்த்துவது கடினமான ஒன்றாக இருந்திருக்கிறது. அவர்கள் பயங்கரமான கிரிக்கெட் விளையாடுகிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.