ரோஹித் - ஹர்திக் பாண்டியா மோதலால் இந்திய அணிக்கு ஆப்பு... ஹர்பஜன் சிங்  எச்சரிக்கை!

முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங், இந்திய அணி நிர்வாகத்தை எச்சரித்து உள்ளார்.

ரோஹித் - ஹர்திக் பாண்டியா மோதலால் இந்திய அணிக்கு ஆப்பு... ஹர்பஜன் சிங்  எச்சரிக்கை!

2024 டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி விளையாட உள்ள நிலையில், அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கும், துணை கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கும் இடையே ஐபிஎல் தொடரில் விரிசல் எழுந்தது.

இருவரும் ஐபிஎல் தொடரில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்களை மறந்து விட்டு ஒரே அணியாக  டி20 உலகக் கோப்பையில் என்ற சந்தேகம் உள்ளது.

இந்த நிலையில், முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங், இந்திய அணி நிர்வாகத்தை எச்சரித்து உள்ளார்.

2021 ஐபிஎல் தொடருக்கு முன் கேப்டனாக பத்து ஆண்டுகள் சிறப்பாக செயல்பட்டு வந்த ரோஹித் சர்மாவை மும்பை இந்தியன்ஸ் அணி நீக்கியது. 

அவருக்கு பதிலாக குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து வரவழைக்கப்பட்ட ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார். 

அதனால், ரோஹித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா இடையே விரிசில் எழுந்ததாக தகவல் பரவியது. மேலும் ஹர்திக் பாண்டியாவின் ஃபார்ம் மிக மோசமாக சரிந்தது.

இது குறித்து ஹர்பஜன் சிங் பேசுகையில், "மும்பை இந்தியன்ஸ் அணி ஒரே அணியாக விளையாடவில்லை. ரோஹித் சர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா மட்டுமின்றி பல்வேறு ஐபிஎல் அணிகளில் ஆடிய மற்ற இந்திய வீரர்களும் ஒன்றாக இணைய வேண்டும். அணிக்காக சிறப்பான ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என அவர்கள் நினைக்க வேண்டும்." என்றார்.

மேலும், "உலகக் கோப்பையை வெல்வது மிகப்பெரிய சாதனையாகும். அனைவரையும் ஒன்றாக இணைக்குமாறு எனவே நான் அணி நிர்வாகத்துக்கு ஒரே ஒரு வேண்டுகோளை வைக்கிறேன்.  அனைவரையும் ஒருங்கிணைக்கும் பணி இந்திய அணி நிர்வாகத்துடையது தான் என்று நான் நம்புகிறேன். இல்லையெனில் தோல்வியடைந்தாலும் ஒன்றாகவே தோல்வியடையுங்கள்" என ஹர்பஜன் சிங் கூறி உள்ளார்.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp