மும்பை அணி வீரர்கள்  எல்லை மீறல்... பிசிசிஐ கொடுத்த தண்டனை... காரணம் ஹர்திக்?

2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட அணி வீரர்களுக்கு பிசிசிஐ தண்டனை வழங்கி உள்ளது

மும்பை அணி வீரர்கள்  எல்லை மீறல்... பிசிசிஐ கொடுத்த தண்டனை... காரணம் ஹர்திக்?

2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா உள்ளிட்ட அணி வீரர்களுக்கு பிசிசிஐ தண்டனை வழங்கி உள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரானபோட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் ஓவர்களை வீசவில்லை. இந்த ஆண்டு இரண்டாவது முறையாக இந்த தவறு நடந்துள்ளது.

முதல் முறை கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் போட்டி சம்பளத்தில் 12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டதுடன், இரண்டாவது முறையாக கேப்டனுக்கு 24 லட்சம் அபராதமும், அணியில் இடம் பெற்று ஆடிய ஒவ்வொரு வீரருக்கும் போட்டி சம்பளத்தில் 25 சதவீதம் அல்லது 6 லட்சம் அபராதமாக விதிக்கப்படுள்ளது.

ஒரு அணி தனக்கு வழங்கப்பட்ட நேரத்திற்குள் ஓவர்களை வீசி முடிக்க வேண்டியது கேப்டனின் பொறுப்பாகும். ஒரு அணியின் கேப்டனே நேர விரயத்தை தவிர்க்க முடியும் என்ற நிலையில், ஹர்திக் பாண்டியா அதை சரியாக கையாளவில்லை என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 144 ரன்கள் மட்டுமே எடுத்ததுடன், கடைசி சில ஓவர்களில் மும்பை இந்தியன்ஸ் அணி விக்கெட்களை எடுத்ததால் வெற்றி கிடைத்த சிறிய வாய்ப்பை பெற அதிக நேரத்தை எடுத்துக் கொண்டார் ஹர்திக் பாண்டியா. 

நடப்பு தொடரில் 10 போட்டிகளில் ஆடி 3 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணி மீதமுள்ள நான்கு போட்டிகளில் வென்றாலும் கூட பிளே-ஆஃப் செல்ல வாய்ப்பு குறைவுதான் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp