ரோஹித் சர்மா ஓய்வு.. ஹர்த்திக் பாண்டியா காயம்.. அடுத்த டி20 கேப்டன் யார்? 2 வீரர்கள் கடும் போட்டி!
முக்கிய வீரர்கள் இல்லாமல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் இளம் வீரர்கள் கொண்ட அணியை பிசிசிஐ தேர்வு செய்ய உள்ளது.
2023 உலகக்கோப்பை தொடரில் இந்தியா ரோஹித் சர்மா தலைமையில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், 2023 உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் இந்தியா - ஆஸ்திரேலியா டி20 தொடர் ஆரம்பிக்க உள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா டி20 தொடரின் போது உலகக்கோப்பை தொடரில் சுமார் 2 மாதம் தொடர்ந்து கிரிக்கெட் ஆடிய பல வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட உள்ளது.
நடப்பு உலகக்கோப்பை தொடரில் விளையாடும் அணியில் இருக்கும் ரோஹித் சர்மா, விராட் கோலி, ராகுல், பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், ரவீந்திர ஜடேஜா உள்ளிட்ட 13 பேருக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று கூறப்படுகின்றது.
காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா ஏற்கெனவேஓய்வில் இருக்கும் நிலையில், டிசம்பர் மாதம் நடக்கவுள்ள தென்னாப்பிரிக்க தொடரின் போது அணியில் இணைவார்.
தற்போது உலகக்கோப்பையில் பங்கேற்றுள்ள வீரர்களில் சூர்யகுமார் யாதவ் மட்டுமே ஆஸ்திரேலிய டி20 தொடருக்கு ஆடத் தயாராக உள்ளதுடன், பிரசித் கிருஷ்ணா அண்மையில் தான் அணியில் இணைந்தார் என்பதால் அவரும் டி20 தொடரில் விளையாடலாம்.
இந்த நிலையில், முக்கிய வீரர்கள் இல்லாமல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் இளம் வீரர்கள் கொண்ட அணியை பிசிசிஐ தேர்வு செய்ய உள்ளது.
இதனையடுத்து, இந்திய அணிக்கு யாரை கேப்டனாக நியமிப்பது என்பதில் போட்டி ஏற்பட்டுள்ளது.
சூர்யகுமார் யாதவ்டி20 போட்டிகளில் சிறப்பாக செயற்படும் நிலையில், அவரை கேப்டனாக அறிவிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இருந்தாலும், சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியின் கேப்டன் ருதுராஜுக்கு கேப்டன் பதவியை கொடுக்க வாய்ப்பு உள்ளதாக பிசிசிஐ வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.