இளம் வீரரருக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு இல்லை - பின்னணியில் கவுதம் கம்பீர்?
இந்திய டி20 அணியில் ஃபினிஷர் ஆக சிறப்பாக செயல்பட்டு வந்த ரிங்கு சிங்கின்ற பேட்டிங் சராசரி மற்றும் ஸ்ட்ரைக் ரேட் அபாரமாக இருந்தது.
இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் அதிரடி பேட்ஸ்மேன் சிவம் துபேவுக்கு பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைக்காது என்றும் அதற்கு
பயிற்சியாளர் கவுதம் கம்பீர் காரணம் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய டி20 அணியில் ஃபினிஷர் ஆக சிறப்பாக செயல்பட்டு வந்த ரிங்கு சிங்கின்ற பேட்டிங் சராசரி மற்றும் ஸ்ட்ரைக் ரேட் அபாரமாக இருந்தது.
டி20 உலகக் கோப்பை க்கு முன்பு வரை ரிங்கு சிங்கின் சராசரி 89 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 143 ஆக இருந்த நிலையில், உலக கோப்பையில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை.
அவருக்கு பதிலாக டி20 போட்டிகளில் சராசரி 31 ஸ்ட்ரைக் ரேட் 137 கொண்ட சிவம் துபேவுக்கு அணியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது.
சிவம் துபே இறுதிப் போட்டியில் 16 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு ஒரு காரணமாக அமைந்த போதும், மற்ற போட்டிகளில் அவர் பெரிதாக சோபிக்கவில்லை.
உலகக் கோப்பைக்கு பின் ஜிம்பாப்வே தொடரில் பங்கேற்ற ரிங்கு சிங், நான்கு இன்னிங்ஸ்களில் 60 ரன்கள் சேர்த்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 176 ஆக இருந்தது.
இதையடுத்து வேகப் பந்துவீச்சாளராவும் செயல்படக் கூடிய திறன் கொண்ட சிவம் துபே அல்லது சிறந்த ஃபினிஷராக இருக்கும் ரிங்கு சிங் ஆகிய இருவரில் யாரை இந்திய அணி நிர்வாகம் தேர்வு செய்யும் என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில், சிவம் துபே ஆல் ரவுண்டராக இருந்தாலும் அவரை முந்தி ரிங்கு சிங்கிற்கே இலங்கை டி20 தொடரில் வாய்ப்பு அளிக்கப்படும் என கூறப்படுகிறது.
பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஆலோசகராக இருந்தபோது ரிங்கு சிங் அந்த அணியில் இடம் பெற்று இருந்தார்.
அப்போது அவர் சரியாக ஆடாத போதும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்க முக்கிய காரணமாக கவுதம் கம்பீர் இருந்தார். எனவே, இந்திய அணியிலும் ரிங்கு சிங்கிற்கு கம்பீர் தொடர்ந்து ஆதரவு அளிப்பார் என கூறப்படுகிறது.