பொய் சொன்ன ஹர்திக்.. ஆப்பு வைக்க காத்திருக்கும் ரோஹித் சர்மா.. இனி மேல் இரண்டு தரமான சம்பவங்கள்!

ஐபிஎல் 17ஆவது சீசனுக்கு முன், ட்ரேடிங் மூலம் ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கிய பின்னர் சர்ச்சைகள் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. 

பொய் சொன்ன ஹர்திக்.. ஆப்பு வைக்க காத்திருக்கும் ரோஹித் சர்மா.. இனி மேல் இரண்டு தரமான சம்பவங்கள்!

ஐபிஎல் 17ஆவது சீசனுக்கு முன், ட்ரேடிங் மூலம் ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கிய பின்னர் சர்ச்சைகள் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. 

ஹர்திக் பாண்டியா கேப்டனாக பொறுப்பேற்றப் பிறகு, ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், பும்ரா போன்றவர்கள் வாழ்த்துகளை சொல்லவில்லை. இதன்மூலம், இவர்கள் அதிருப்தியில் இருப்பதாக கருதப்படுகிறது.

போட்டியின் நடுவில் ரோஹித் சர்மா ஆலோசனை கூற வரும்போது, ஹர்திக் கண்டுகொள்ளாமல் செல்வது போன்ற விஷயங்கள் நடந்து வருகிறது. 

ரோஹித்தை இப்படி அவமதிப்பதால், ஹர்திக் பீல்டிங் செய்யும்போது, ரோஹித் சர்மா ரசிகர்கள் ஹர்திக்கை தொடர்ந்து அவமதித்து வருகிறார்கள். 

இந்த நிலையில், மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா, முதல் இரண்டு போட்டிகளில் பந்துவீசினார். குறிப்பாக, ஆட்டத்தின் முதல் ஓவரை வீசி, தன்னை முழு நேர பௌலராக காட்டிக்கொண்டார்.

முதல் இரண்டு போட்டிகளில் ஓவர்களை வீசி, ஓவருக்கு சராசரியாக 10+ ரன்களை விட்டுக்கொடுத்த அவர், அடுத்தடுத்த போட்டிகளில் பந்துவீசவே இல்லை. 

இந்நிலையில், ஹர்திக் பாண்டியாவுக்கு மீண்டும் காலில் வலி ஏற்பட்டுள்ளதால்தான், அவர் பந்துவீசுவதை தவிர்த்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

கடந்த 2023 ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாடியபோது, பாண்டியாவுக்கு காலில் காயம் ஏற்பட்டிருந்ததால், தொடரில் இருந்து விலகிய ஹர்திக் பாண்டியா, அதன்பிறகு நேரடியாக ஐபிஎல் 17ஆவது சீசனில் விளையாடி வருகிறார். 

தற்போது அவருக்கு மீண்டும், அதே இடத்தில் வலி ஏற்பட்டுள்ளதால், முழு பிட்னஸை எட்டுவதற்குள் அவர், மும்பை அணிக்கு வந்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஹர்திக் பாண்டியா இனி வரும் போட்டிகளில் பந்துவீசவில்லை என்றால், டி20 உலகக் கோப்பை 2024 தொடரில், அவருக்கு மாற்றாக ஷிவம் துபேவை களமிறக்க ரோஹித் முடிவு செய்வார் எனக் கருதப்படுகிறது. 

அதுமட்டுமல்ல, காயம் காரணமாக, ஹர்திக் மும்பை அணியில் இருந்து, இந்த சீசனில் மட்டும் விலகவும் வாய்ப்புகள் இருப்பதாகவும், மீண்டும் ரோஹித்துக்கே இந்த சீசனில் மட்டும் கேப்டன் பதவியை கொடுக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

Colomboதமிழ் WHATSAPPஇல் இணையுங்கள் JOIN NOW

WhatsApp