பாகிஸ்தான் பதறவைத்த ஹர்திக் பாண்டியா.. பந்துவீச்சில் செய்த சாதனை... வேற லெவல்!
ஹர்திக் பாண்டியா இருந்தாலே இந்திய அணி வெற்றி பெறும் என்றும், பாகிஸ்தான் அணிக்கு எதிராக அவர் சிறப்பாக பவுலிங் செய்வார் என்பது உறுதியாகி உள்ளது.

2023 ஒருநாள் போட்டி உலகக் கோப்பை தொடரின் போட்டிகள் மற்றும் 2024 டி20 உலகக் கோப்பை போட்டிகள் அனைத்திலும் இந்திய அணி வெற்றி பெற்று இருந்தது. தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று இருக்கிறது.
இதனையடுத்து, ஹர்திக் பாண்டியா இருந்தாலே இந்திய அணி வெற்றி பெறும் என்றும், பாகிஸ்தான் அணிக்கு எதிராக அவர் சிறப்பாக பவுலிங் செய்வார் என்பது உறுதியாகி உள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் மோதிய போட்டியில் முகமது ஷமிக்கு காலில் ஏற்பட்ட வலி காரணமாக ஆடுகளத்தை விட்டு வெளியேறிய இக்கட்டான நேரத்தில் ஹர்திக் பாண்டியா சிறப்பாக பந்து வீசி முதல் விக்கெட்டை வீழ்த்தினார்.
இந்தப் போட்டியில் அவர் எட்டு ஓவர்களில் 31 ரன்கள் விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அத்துடன், இந்திய அணியிலேயே மிகக் குறைந்த ரன்கள் விட்டுக் கொடுத்ததோடு இரண்டு விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார்.
இதன் மூலம் சர்வதேச போட்டிகளில் மொத்தம் 200 விக்கெட்களை பாண்டியா வீழ்த்தி இருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் 17 விக்கெட்களையும், டி20 போட்டிகளில் 94 விக்கெட்களையும், ஒருநாள் போட்டிகளில் 89 விக்கெட்களையும் அவர் வீழ்த்தி இருக்கிறார்.
அவர் தற்போது டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதில்லை என்றாலும் இந்த அரிய சாதனையை செய்து இருக்கிறார். டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் ஹர்திக் பாண்டியா இரண்டாவது இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பேட்ஸ்மேனாகவும் இதுவரை சிறப்பாக செயல்பட்டு இருக்கும் ஹர்திக் பாண்டியா டெஸ்ட் போட்டிகளில் 532 ரன்களையும், டி20 போட்டிகளில் 1812 ரன்களையும், ஒருநாள் போட்டிகளில் 1805 ரன்களையும் குவித்து இருக்கிறார்.
இதைத் தவிர்த்து சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ஹர்திக் பாண்டியா அபாரமான சாதனை ஒன்றை செய்து இருக்கிறார்.
இதுவரை பாகிஸ்தான் அணிக்கு எதிராக சர்வதேச கிரிக்கெட் தொடர்களில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவராக ஹர்திக் பாண்டியா இருக்கிறார். தற்போது அதில் மேலும் ஒரு மைல் கல்லாக பாகிஸ்தானுக்கு எதிராக 15 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
டி20 உலகக் கோப்பை, ஒருநாள் போட்டி உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடர்களில் மட்டும் பாகிஸ்தானுக்கு எதிராக அவர் 15 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
இந்த பட்டியலில் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். அவர் 11 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அடுத்த மூன்று இடங்களில் இந்திய பந்துவீச்சாளர்கள் உள்ளனர்.