2ஆவது ஒருநாள் போட்டியில் களமிறங்கவுள்ள இளம் வீரர்.. நீக்கப்படும் முக்கிய வீரர்!
கட்டாக் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றி விடும்.

இந்தியா, இங்கிலாந்து அணிக்கு இடையிலான மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடரில் இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்த நிலையில், கட்டாக் நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றி விடும்.
முதல் ஒருநாள் போட்டியில் யாரும் எதிர்பாராத வகையில் இந்திய அணியின் பிளேயிங் லெவனுக்குள் ஹர்ஷித் ராணா அறிமுக வீரராக களமிறங்கினார்.
இந்த சூழலில் இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆர்ஸ்தீப் அணிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
டி20 போட்டிகளில் விளையாடியதால் அவருக்கு ஓய்வு வழங்கப்பட்டதாகவும், தற்போது இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆர்ஸ்தீப் கண்டிப்பாக திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 63 போட்டியில் விளையாடியுள்ள ஆர்ஸ்தீப் ஒரு நாள் கிரிக்கெட்டில் பொறுத்தவரை இந்திய அணிக்காக 8 போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்டுகளை தான் வீழ்த்தி உள்ளார்.
சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கு முன்பு ஒருநாள் கிரிக்கெட்டில் பயிற்சி பெற அவர் அணிக்கு திரும்பும் நிலையில், முதல் ஒருநாள் போட்டியில் ஹர்ஷித் ரானா நீக்கப்படுவார் என தெரிகிறது.
ஹர்சித் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில், ஒரு வேளை ஹர்சித்துக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க நினைத்தால் முகமது ஷமிக்கு இரண்டாவது ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு அளிக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.